Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தேர்வு முறையை மாற்றிய சிபிஎஸ்சி நிர்வாகம்!

நோய் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டு காலமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது, ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மெல்ல,மெல்ல செயல்பட தொடங்கினர்.

9 முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் இருக்கின்ற மாணவர்களுக்கு நேரடி வகுப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. எதிர்வரும் 1 ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகள் தொடங்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் நோய் தொற்று காரணமாக, சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு சென்ற வருடம் ரத்து செய்யப்பட்டன, அதேபோல எதிர்பாராத சூழ்நிலை மறுபடியும் ஏற்படுவதை தவிர்க்கும் விதத்தில் இரண்டு பருவ பொதுத் தேர்வு முறையை சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த புதிய தேர்வு நடைமுறையின் அடிப்படையில் பொதுத்தேர்வு இரண்டாகப் பிரிக்கப்பட்டு முதல் பருவத்தேர்வு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களிலும், இரண்டாவது பருவத்தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பருவத்திலும் பாடத்திட்டத்தின் 50 சதவீத பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்படும், ஏதாவது ஒரு தேர்வை நடத்த இயலாத சூழ்நிலையில், ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தேர்வு முறையை மாணவர்கள் எளிதாக அறிந்து கொள்ள இயலும் விதத்தில் மாதிரி வினாத்தாள்களும், மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டமும் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

இதுபோன்ற சூழ்நிலையில், பருவத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் நவம்பர் 30-ஆம் தேதி முதல் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு முதல் பருவத்தேர்வு ஆரம்பமாகிறது. நவம்பர் மாதம் 30 முதல் டிசம்பர் மாதம் 11-ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது.

சிபிஎஸ்சி 12 ஆம் வகுப்பு தேர்வு டிசம்பர் மாதம் 1 முதல் 22ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் மாநில கல்வியில் படித்து வரும் 10 மற்றும் 11 அதோடு 12 ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இந்த சூழ்நிலையில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் முதல் பருவத் தேர்வு கால அட்டவணையை சிபிஎஸ்சி வெளியிட்டிருக்கிறது.

Exit mobile version