Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக பள்ளி கல்வித்துறை அதிரடி அறிவிப்பு! தயாராகும் 12 மாணவர்கள்!

தமிழகத்தில் கொரோனா சூழலின் காரணமாக அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டிருந்தன. பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையிலும் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

9 முதல் 11 வகுப்பு வரை தேர்வு இல்லாமல் முழு தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. தேர்வுகள் ரத்து செய்து நன்மதிப்பை பெறுவதைவிட மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு தேர்வுகள் நடத்தப்படும் என்று ஏற்கனவே அரசு தெரிவித்திருந்தது.

 

12 வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் முடிவடைந்த நிலையில் கொரோனா பாதிப்பின் காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்து வரும் பொழுது தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும். அதுவரை ஆசிரியர்கள் வீட்டிலிருந்து மாணவர்களுக்கு வழிகாட்டுதல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது..

 

இப்பொழுது 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுக்கு தயாராகும் வகையில் வாட்ஸ் அப் மூலமாக அலகு தேர்வு நடத்தலாம் என்ற பள்ளிக் கல்வி இயக்கம் முடிவெடுத்துள்ளது.

 

அதில் பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியான வாட்ஸ் அப் குழு ஒன்று அமைக்கப்படும். அதில் வினாத்தாள்கள் அனுப்பப்படும். வினாக்களுக்கு மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த பின்னர் அதை ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும். தேர்வு தாள்கள் திருத்தப்பட்ட பின்பு மதிப்பெண் அனுப்பி வைக்கப்படும் என்று கூறியுள்ளது.

Exit mobile version