Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முன் நெற்றியில் அதிகமாக முடி உதிர்கிறதா? அப்போ இதை அங்கு தடவுங்கள் போதும்!

#image_title

முன் நெற்றியில் அதிகமாக முடி உதிர்கிறதா? அப்போ இதை அங்கு தடவுங்கள் போதும்!

முன் நெற்றியில் முடி இருந்தால் அது ஒரு அழகு.. ஆனால் மன அழுத்தம், தூக்கமின்மை, வேலைப்பளு, ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் முன் நெற்றி பகுதியில் உள்ள முடி கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து விடும் நிலை ஏற்படுகிறது. இதனால் இளம் பருவத்தில் வயதான தோற்றத்திற்கு ஆளாகி விடுகின்றோம்.

இந்த முன் நெற்றி முடி உதிர்வை சரி செய்ய எளியத் தீர்வு…

தேவையான பொருட்கள்:-

*விளக்கெண்ணெய்
*தேங்காய் எண்ணெய்
*கற்றாழை ஜெல்
*சின்ன வெங்காயம்

செய்முறை…

ஒரு மிக்ஸி ஜாரில் 1/4 கப் கற்றாழை ஜெல் துண்டு மற்றும் 5 சின்ன வெங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து அதில் 100 மில்லி விளக்கெண்ணெய் மற்றும் 100 மில்லி தேங்காய் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள கலவையை போட்டு குறைவான தீயில் காய்ச்சி கொள்ளவும்.

இந்த எண்ணெயை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்து வைத்துக் கொள்ளவும். தினமும் இந்த எண்ணெயை முன் நெற்றி பகுதியில் தடவி வந்தால் இழந்த முடி அனைத்தும் முளைக்க ஆரம்பிக்கும்.

Exit mobile version