Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திடீரென மின் கம்பம் முறிந்ததால் ஏற்பட்ட பரபரப்பு! 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!

Excitement caused by a sudden power outage! 5 people admitted to hospital!

Excitement caused by a sudden power outage! 5 people admitted to hospital!

திடீரென மின் கம்பம் முறிந்ததால் ஏற்பட்ட பரபரப்பு! 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!

சிவகங்கை அடுத்துள்ள கண்ணாரிருப்பு ஊராட்சியில் நேற்று தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சிறுவாணி கண்மாயில் இருந்து செல்லும் பாசன கால்வாய் சீரமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியில் மொத்தம் 74 பெண்கள் உட்பட 70 பேர் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் பாசன கால்வாயை சீரமைத்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த வயல் ஒன்றில், இருந்த மின்கம்பம் உடைந்து இவர்கள் மேல் விழுந்து விட்டது.

அதை தொடர்ந்து அந்த மின் கம்பத்தில் இருந்த மின் கம்பிகள் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த  பெண்கள் மீது விழுந்தது. மகமுநாச்சியார் (வயது45) என்ற பெண்ணின் மீது விழுந்தது. இதைதொடர்ந்து அவரை மின்சாரம் தாக்கியதுடன் அருகே இருந்த ஈஸ்வரி (49), மாரிமுத்து (30), ஜானகி (40), வரலட்சுமி (40) ஆகிய 5 பெண்களையும் மின்சாரம் தாக்கியது. அதனைத் தொடர்ந்து அவருக்கு மின்சாரம் தாக்கியதுடன் அருகே இருந்த என்ற நான்கு பெண்களையும் மின்சாரம் தாக்கியது. அப்போது எதிர்பாராத விதமாக, இறைவனின் செயலாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

அதன் காரணமாக மின்சாரம் தாக்கியும் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இதனை தொடர்ந்து ஐந்து பெண்களையும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீரபத்திரன், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் உமாமகேஸ்வரி, ரத்தினவேலு மற்றும் வளர்ச்சித் துறை அதிகாரிகள் அங்கு சென்று காயமடைந்தவர்களை பார்வையிட்டு நடந்த சம்பவம் குறித்து விவரம் கேட்டறிந்தனர்.

இந்த சம்பவம் குறித்து கண்ணாரிருப்பு அந்த பகுதியின் ஊராட்சி தலைவர் புவனேஸ்வரி கண்ணன் கூறும்போது, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பாசன வாய்க்கால் சீரமைப்பு பணி செய்யலாம் என்று கூறப்பட்டது. அதனாலேயே சிருவாணியிலிருந்து செல்லும் பாசன வாய்க்காலை சீரமைக்கும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

நேற்று காலை 10 மணி அளவில் திடீரென அவர்கள் வேலை பார்த்த இடத்தில், இருந்த  மின்கம்பம் முறிந்து அந்த பெண்கள் மீது விழுந்து விட்டது. இதில் 5 பெண்களை மின்சாரம் தாக்கியது. அவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை யில் உள்ளனர் என்றும் கூறினார்.

Exit mobile version