Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சேலம் மாவட்டத்தில் பரபரப்பு! தனியார் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்திற்கு சீல்!

excitement-in-salem-district-seal-for-private-skill-development-training-center

excitement-in-salem-district-seal-for-private-skill-development-training-center

சேலம் மாவட்டத்தில் பரபரப்பு! தனியார் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்திற்கு சீல்!

சேலம் மாவட்டத்தில் உள்ள 5 ரோடு பகுதியில் தனியார் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் செயல்பட்டு வருகின்றது.அந்த மையத்தில் டிப்ளமோ, செவிலியர் மற்றும் ஆசிரியர் பயிற்சி அளிக்கப்பட்டுவந்தது.இந்நிலையில் போலீசார்க்கு ரகசிய தகவல் ஒன்று  கிடைத்தது.அந்த தகவலின் பேரில் போலீசார் ,தொழிலாளர் நலத்துறை ,குழந்தைகள் நல குழு உறுப்பினர்கள் ,மருத்துவ அலுவலர்கள் ,மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் பயிற்சி நிறுவன உரிமியாளர் விக்டோரியாவிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் அந்த விசாரணையில் பயிற்சி நிறுவனம் தொடர்பான பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டது.அந்த ஆய்வில் பயிற்சி நிறுவனம் முறையான அனுமதியில்லாமல் நடைபெற்று வந்தது தெரியவந்தது.மேலும் அந்த மையத்தில் பயிற்சி பெற வந்த மாணவிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.அதில் மாணவிகளை  தனியார் மருத்துவமனைக்கு வேலைக்கு அனுப்பி வந்ததும் அதற்கான ஊக்கத்தொகையை மாணவிகளுக்கு வழங்காமல் நிறுவன உரிமையாளர்களே வைத்துக்கொள்வதும் தெரியவந்தது.

அந்த மையத்தில் பயிற்சிக்கு அனுமதி கட்டணம் வசூலிக்கப்படாது என கூறப்பட்டிருந்தது.இந்நிலையில் அங்கு பயிற்சியில் சேரும்போது ரூ5,000 வசூல் செய்யப்பட்டதாக மாணவிகள் தெரிவித்தனர். விடுதி வசதியும் முறையாக அளிக்கப்படாமல் தரமற்ற உணவுகளை அளித்ததும் தெரியவந்தது.இதையடுத்து பயிற்சி மையத்தில் இருந்து 18மாணவிகளில் 13 மாணவிகள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.மீதமுள்ள மூன்று மாணவிகள் தற்காலிகமாக குழந்தைகள் நல குழு உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.மேலும் முறையாக அனுமதியில்லாமல் இயங்கி வந்த பயிற்சி மையத்திற்கு  வட்டாட்சியர் தலைமையில் சீல் வைக்கப்பட்டது.

Exit mobile version