சேலம் மாவட்டத்தில் பரபரப்பு! போலீஸ்காரரின் கன்னத்தில் அறைந்த சம்பவம்!

0
166
A furious father who killed his son! A shocking incident in Salem!

சேலம் மாவட்டத்தில் பரபரப்பு! போலீஸ்காரரின் கன்னத்தில் அறைந்த சம்பவம்!

கோவை மண்டல உணவுப்பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக இருப்பவர் பாலாஜி. நேற்று முன்தினம் சேலத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு முடித்த பிறகு அவர் மீண்டும் கோவைக்குச் சென்று கொண்டிருந்தார்.  அப்போது அவர் காரில் சென்று கொண்டிருந்தபோது மகுடஞ்சாவடி அருகே உள்ள காக்காபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு மோட்டார் சைக்கிளில் இரண்டு மூட்டை ரேஷன் அரிசி கடத்துவதாகவும் ரகசிய தகவல் கிடைத்தது. இருந்த அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி, போலீஸ்காரர் சிவக்குமார் ஆகியோரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த தகவலை ஏற்றுக் கொண்டு ரேஷன் அரிசி கடத்தியவரை பிடிக்க ஆர்வம் காட்டவில்லை என தெரிய வருகிறது. ரேஷன் அரிசி கடத்தியவர் அந்த பகுதியில் உள்ள மண் சாலை வழியாக சென்று தலைமறைவாகிவிட்டார். அதே நேரத்தில் ரோந்து போலீசார் இருந்த இடத்திற்கு  பாலாஜி சென்றுள்ளார். அப்போது அவர்கள் ரேஷன் அரிசி கடத்தி செல்பவரை பிடிக்க உத்தரவிட்டும் ஏன் பிடிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்  அதற்கு அவர்கள் ரேஷன் அரிசி எடுத்து செல்பவரை பிடித்தால் தங்களை தாக்கி விடுவாரோ என்ற சிறிய அச்சத்தால் தான் பிடிக்கவில்லை எனவும் பதில் அளித்துள்ளனர்.

 ஆத்திரம் அடைந்த போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி திடீரென போலீஸ்காரர் சிவக்குமார் கன்னத்தில் அறைந்து உள்ளார். மேலும் இது குறித்து சேலம் மாநகராட்சிபோலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என  போலீஸ்காரர் சிவகுமார் விசாரணை அதிகாரியிடம் எழுதிக் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த விசாரணை அறிக்கை போலீஸ் கமிஷனரிடம் வழங்கப்பட்டது. மேலும் போலீஸ்காரரை தாக்கிய போலீஸ்  சூப்பிரண்டு பாலாஜியை நேரில் அழைத்து போலீஸ் கமிஷனர் விசாரணை நடத்தி வருகிறார்.