Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சேலத்தில் பரபரப்பு! கடைக்குள் புகுந்த பேருந்து!

Excitement in Salem! The bus entered the store!

Excitement in Salem! The bus entered the store!

சேலத்தில் பரபரப்பு! கடைக்குள் புகுந்த பேருந்து!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம்விஆர் சுங்கச்சாவடியில் இருந்து மேட்டூர் நோக்கி பேருந்துகள்  இயக்கப்படுகின்றது.இந்நிலையில் அந்த வழியாக தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்பொழுது அதே பகுதியில் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.அந்த லாரியானது திடீரென குறுக்கே வந்துள்ளது அதனால் அந்த லாரியின் மீது மோதாமல் இருபதற்காக பேருந்து ஓட்டுநர் பேருந்தை திசை திருப்பியுள்ளார்.அப்போது அந்த பேருந்தானது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள ஆம்னி வேன் மற்றும் இருசக்கர வாகனக்களின் மீது மோதியது.

அந்த பேருந்து அருகில் இருந்த மளிகை கடையிலும் புகுந்து விபத்துக்குள்ளானது.அந்த விபத்தில் கோட்டகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருடைய மகன் சண்முகம் அவருடைய மனைவி சுலோச்சனா மகன் லோகேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.மேலும் பேருந்து மோதிய ஆம்னி வேன் நொறுங்கியது.ஆம்னி ஓட்டுநரின் கால் முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்தார்.

இந்த விபத்து குறித்து ஓமலூர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.மேலும் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.மேலும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் இணைந்து விபத்துக்குள்ளான வாகனங்களை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினார்கள்.அதிவேகத்தில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Exit mobile version