Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடுஇரவில் ஏற்பட்ட பரபரப்பு! தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று பற்றி எரிந்த கார்!

ஆம்பூர் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சமியுல்லா என்பவர் தன்னுடைய நண்பர் நவாஸ் உடன் சென்னையிலிருந்து ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை, பெங்களூரு, தேசிய நெடுஞ்சாலையில் சின்ன கோமேஸ்வரம் என்ற பகுதியில் கார் பழுதாகி நின்றது.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் காரை தள்ளிக் கொண்டு இருவரும் வந்ததாக சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் திடீரென்று கார் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த 2 பேரும் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையை சார்ந்தவர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர், ஆனால் அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து நாசமானது.

இதுதொடர்பாக ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். அதோடு நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையில் கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் காரணமாக, அங்கு மிகப்பெரிய பரபரப்பு உண்டானது.

Exit mobile version