Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்திய அஞ்சல் துறையில் எக்ஸிக்கியூட்டிவ் பணி!! 30 ஆயிரம் சம்பளம் வாங்க அக்டோபர் 31க்குள் விண்ணப்பியுங்கள்!!

Executive Jobs in Indian Postal Department!! Apply before 31st October to get 30k salary!!

Executive Jobs in Indian Postal Department!! Apply before 31st October to get 30k salary!!

மத்திய தகவல் தொடர்பு துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தபால் துறையின் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் பேங்க் லிமிடெட் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

அதன்படி காலியாக உள்ள எக்ஸிக்கியூட்டிவ் பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றவர்கள்அக்டோபர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வகை: மத்திய அரசு வேலை

நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் பேங்க் லிமிடெட்(IPPB)

பணி:

*எக்ஸிக்கியூட்டிவ்

காலிப்பணியிடங்கள்: எக்ஸிக்கியூட்டிவ் பணிக்கென மொத்தம் 350 காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

கல்வி தகுதி:

எக்ஸிக்கியூட்டிவ் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டுமென்[று சொல்லப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

எக்ஸிக்கியூட்டிவ் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 20 என்றும் அதிகபட்ச வயது வரம்பு 35 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு விதிகளின் படி வயது வரம்பில் மேலும் சில தளர்வுகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மாத ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தேர்வு செய்யப்படும் முறை:

1)ஆன்லைன் எழுத்து தேர்வு
2)சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

எக்ஸிக்கியூட்டிவ் பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் என்ற அதிகாரபூர்வ இணைய தள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க இறுதி நாள்: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 31 கடைசி தேதியாகும்.

Exit mobile version