4 சுங்க சாவடிகள் மூடப்படுவதால் பட்டாசு வெடித்து கொண்டாடிய நிர்வாகிகள்!

0
140
Executives celebrate with fireworks as 4 customs posts close!

4 சுங்க சாவடிகள் மூடப்படுவதால் பட்டாசு வெடித்து கொண்டாடிய நிர்வாகிகள்!

சென்னை மத்திய கைலாசில் இருந்து சிறுசேரி வரை உள்ள பழைய மாமல்லபுரம் சாலையில் கடந்த 12 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அதிகரிப்பால் சாலைகள் மேம்படுத்தப்பட்டன. அப்போது சென்னை புறநகர் பகுதிகள் பேரூராட்சி மற்றும் ஊராட்சி களாக இருந்ததால் பெருங்குடி, பள்ளிக்கரணை, மேடவாக்கம் சாலை, சோழிங்கநல்லூர் கலைஞர் சாலை ஆகிய நான்கு இடங்களில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டன.

இந்தப் பகுதிகள் சமீப காலங்களில் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதால் மாநகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் பலர் கோரிக்கை வைத்தனர். சுங்கச்சாவடிகளை அகற்ற கோரி திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் பழைய மாமல்லபுரம் சாலையில் தற்போது மெட்ரோ பணிகள் நடக்க இருப்பதால், இன்று முதல் பெருங்குடி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், மேடவாக்கம், சோழிங்கநல்லூர் கலைஞர் சாலை ஆகிய நான்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்படும் என அமைச்சர் ஏ.வா. வேலு அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு அப்பகுதியில் உள்ள வாகன ஓட்டிகளிடம் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள நான்கு இடங்களின் சுங்கச்சாவடிகள் மூடப்படுவதால், பெருங்குடி சுங்கசாவடி  அருகே, தென் சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் சோழிங்கநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ அரவிந்த் ரமேஷ் ஆகியோர் தலைமையில் திமுக நிர்வாகிகள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடி இனிப்புகளை வழங்கினார்கள்.