Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தற்போதுள்ள நடைமுறை இந்த வகுப்பிற்கு தொடரும்! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பு!

Existing practice will continue for this class! The announcement made by Minister Anbil Mahesh Poiyamozhi!

Existing practice will continue for this class! The announcement made by Minister Anbil Mahesh Poiyamozhi!

தற்போதுள்ள நடைமுறை இந்த வகுப்பிற்கு தொடரும்! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பு!

சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு பாரத சாரதா சரணாலய தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அதன் பின்னால் அவர் செய்த போது தமிழகத்தில் பல தனியார் பள்ளிகள் பிளஸ் ஒன் பாடங்கள் நடத்தப்படுவதில்லை என்று எண்ணி தான் பிளஸ் ஒன் வகுப்பிற்கான பொதுத்தேர்வு என்பது கொண்டுவரப்பட்டது எனவும் கூறினார்.

மேலும் பிளஸ் ஒன் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடர்ந்து நடத்தப்படுவதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் கள்ளக்குறிச்சியில் தாக்குதலுக்கு உள்ளான தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவதற்கான பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது எனவும் அந்த அடிப்படையில் நேரடி வகுப்பு தொடங்க நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் எனவும் கூறினார்.

மேலும் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 25 ஆயிரம் கழிப்பறைகள் கட்டப்பட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.  மேலும் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெறும் மண்டலம் வாரியான ஆய்வுக்கூடங்களில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் நிதியைப் பெற்ற பள்ளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்காக பேராசிரியர் க அன்பழகன் கல்வி மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 7000 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் நடப்பாண்டில் 1300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கல்வி தொலைக்காட்சியின் முதன்மை செயல் அலுவலர் ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட எந்த பின்புலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவருடைய செயல்பாடுகள் சரியாக உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும் எனவும் அரசு விழிப்புணர்வுடன் இருக்கிறது என்று கூறியிருந்தார்.

Exit mobile version