Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

EIA(Environmental Impact Assessment)Act பற்றிய முழுவிபரம்

EIA(Environmental Impact Assessment)Act பற்றிய முழுவிபரம்

நம் இந்தியாவை பொருத்தமட்டில் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்த பிறகே அதை சட்டமாக வரையறுக்கப்படுகிறது. அதேபோன்றுதான் 1984-ம் ஆண்டு போபாலில் ஏற்பட்ட விசவாய்வு கசிவால் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.இதில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் லட்சக்கணக்கானோர்.இந்த விசவாய்வு விபத்தின் பிறகே சூழலியல் தாக்க மதிப்பீடு சட்டம் (EIA) 1984-1986களில் வரையறுக்கப்பட்டு 1994-ல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

EIA Act என்றால் என்ன?
வெளிநாடுகளில் இருந்து முதலீடு செய்து இந்தியாவில் தொடங்கும் நிறுவனங்களோ அல்லது இந்தியாவிற்குள்ளையே தொடங்கும் இந்திய நிறுவனங்களோ ஏதுவாகினும் நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பு இந்த EIA சட்டத்தின் மூலம் முறையான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

எந்த வகையான சான்றிதழ்?

எடுத்துக்காட்டாக ஒரு மருந்து நிறுவனம் தொடங்கப் போவது என்றால் அந்த நிறுவனத்தின் சார்பில்,இந்த நிறுவனம் ஆரம்பிப்பது என்றால் என்ன வகையான வாயுக்கள் வெளியிடும்,என்ன வகையான கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது,இதன் கழிவுகள் எவ்வாறு வெளியேற்றப்படுகிறது அல்லது எவ்வாறு சுத்திகரிக்கப்படுகிறது,
இதனால் சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் ஏற்படும் ஆபத்துகள், இதுபோன்ற அனைத்து விளக்கங்களும் கொடுத்து
EIA act-ன் மூலம் முறையான சான்றிதழ் பெற்ற பிறகே அங்கு அந்த நிறுவனம் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும்.

இதுமட்டுமின்றி நமது அரசாங்கம் ஒரு நிறுவனம் ஆரம்பிப்பதற்கு ஒப்புதல் அளித்த பிறகு அந்த நிறுவனத்தினால் நிறைய விளைவுகள் ஏற்படும் என்று மக்கள் உணர்ந்தால் அதனை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தி அந்த நிறுவனம் தொடங்குவதை தடுக்கலாம்.ஒரு நிறுவனம் தொடங்குவதற்கு அந்த பகுதி மக்கள் மட்டுமல்லாமல் மற்ற பகுதி மக்களும் அவர்களுடைய எதிர்ப்புகளை தெரிவிக்கும் வகையில் இந்த சட்டம் இருந்தது.

(அதாவது தூத்துக்குடியில் ஒரு நிறுவனம் ஆரம்பிப்பதற்கு அப்பகுதி மக்கள் மட்டும் இன்றி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் அதற்கு எதிரான கருத்துகளை தெரிவிக்க அனுமதி வழங்கப்பட்டது)

மேலும் அரசாங்கம் மக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்க 108 நாட்கள் அவகாசம் அளித்தது.

1994-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட EIA சட்டம் 2006-ல் மாற்றி வரையறுக்கப்பட்டது.

இந்த மாற்றியமைக்கப்பட்ட சட்டத்தில் நிறுவனங்கள் A , B  என்று வகைப்படுத்தப்பட்டு இதில் A1 A2 B1 B2 என்று துணை வகைப்படுத்தப்பட்டது.
அதாவது A1 A2 கேட்டகிரியில் வரும் நிறுவனம் அனைத்து விதமான ஆய்வுகளுக்கும் உட்பட்டு EIA சான்றிதழ் பெற்ற பின்பே அங்கு அந்த நிறுவனம் தொடங்க அனுமதி அளிக்கப்படும்.எடுத்துக்காட்டாக கேஸ் நிறுவனங்கள்,பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள் போன்றவை A1 A2 போன்ற வகையைச் சேர்ந்தவையாகும்.

B1 B2 வகைகளில் சாலை அமைத்தல் டேம் கட்டுதல் போன்றவற்றை அடங்கும்.B2 வகையில் இருக்கும் நிறுவனங்களுக்கும் எந்தவிதமான EIA சான்றிதழும் தேவையில்லை.

அதேபோன்று எந்த பகுதியில் அந்த நிறுவனம் ஆரம்பிக்க படுகிறதோ அந்த பகுதி மக்கள் மட்டுமே அதற்கான கருத்துக்களை தெரிவிக்க அனுமதி அளிக்கப்பட்டது.அதேபோன்று இந்த கருத்துக்கள் தெரிவிக்கும் நாட்களும் 108 நாட்களிலிருந்து 30 நாட்கள் ஆக குறைக்கப்பட்டது.

EIA Act 2020-ல் மீண்டும் மாற்றி வரையறுக்கப்பட்டது?

2020 வரை முறையின்படி ஒரு நிறுவனம் ஆரம்பிப்பதற்கு அனைத்து விதமான
தளர்வுகளும் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாகச் சொல்லப்போனால் கெமிக்கல் கம்பெனியான மருந்து கம்பெனிகளை B2 வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி இந்த சட்டத்தின்படி மாற்று கருத்தினை அரசுப் பணியில் உள்ளவர்கள் மற்றும் அந்த நிறுவனங்களை சார்ந்தவர்கள் மட்டுமே கூற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களை தெரிவிக்கும் நாட்கள் 30 நாட்களில் இருந்து 20 நாட்களாக குறைத்துள்ளது.

Exit mobile version