பண்டோரா பேப்பர்கள் குறித்து வெளியான விளக்கம்! பிரபலங்களின் உண்மை முகம்!

0
208
Explanation on Pandora Papers! The real face of celebrities!

பண்டோரா பேப்பர்கள் குறித்து வெளியான விளக்கம்! பிரபலங்களின் உண்மை முகம்!

பல காலங்களாகவே வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் பிரபல நடிகர்கள், தொழிலதிபர்கள் என பலரும் கருப்பு பணங்களை சேமித்து வைக்கின்றனர். அதுபோல் முறைகேடாக சொத்து குவித்து அணில் அம்பானி, சச்சின் டெண்டுல்கர், நடிகர் ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தொடர்பான ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

பிரிட்டிஷ் விர்ஜின் தீவு, செஷல்ஸ் தீவு, ஹாங்காங், பெலிஸ் போன்ற நாடுகளில் உள்ள தீவுகள்  வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கான சொர்க்கமாக திகழ்கிறது. கருப்பு பணம் மற்றும் முறைகேடான சொத்துகளை குவித்து வைக்க அந்த நாடுகளை தேர்ந்தெடுக்கிறார்கள். கடந்த 2016 ஆம் ஆண்டு பனாமா நாட்டைச் சேர்ந்த மொசாக் பென்செக்கா என்ற சட்ட நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் ஜெர்மனியைச் சேர்ந்த ஓர் ஊடகத்தின் மூலம் வெளிவந்தது.

சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர் கூட்டமைப்பு இதை புலனாய்வு செய்து இந்த பட்டியலை வெளியிட்டனர். இதில் பிரபல திரை நட்சத்திரங்கள் ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன்,  டிஎல்ப் நிறுவனத்தின் தலைவர் கேபி சிங் நிறுவனத்தின் தலைவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 9 பேர் மற்றும் கௌதம் ஆதானியின் மூத்த சகோதரர் வினோத் ஆதானி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பனாமா பேப்பர்ஸ் மற்றும் பாரடைஸ் பேப்பர்ஸ் மூலம் முந்தைய முதலீடுகளின் ரகசிய ஆவணங்கள் வெளியானதை தொடர்ந்து, மத்திய அரசு கருப்பு பணம் பற்றிய வரி விதிப்பு சட்டத்தை இயற்றியது. மற்றும் பாரடைஸ் பேப்பர் போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்ட  விசாரணையின் மூலம் தோராயமாக கடந்த மாதம் 15.09.21 வரை 20,352 கோடி பண முதலீடுகள் கண்டறியப்பட்டுள்ளன என மத்திய அமைச்சகம் அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்தான் பண்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் இணையதளத்தில் தற்போது ஆவணங்களை வெளியிட்டு உள்ளனர். அதில் கடந்த 1970களில் இருந்து வாங்கப்பட்ட சொத்துகள் இடம்பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக 1996ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டு வரை வாங்கப்பட்ட அனைத்து சொத்துக்கள் மற்றும் முறைகேடான நிதி முதலீடுகள் தான் அதிகமாக உள்ளன. இதை விசாரணையில் போலி நிறுவனங்களுக்கு எதிராக பல நாடுகள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தொடங்கிய பிறகும் எப்படி அந்த நிறுவனங்கள் செயல்படுகின்றன என்ற விளக்கத்தை அளித்துள்ளது.

வெளிநாடுகளில் நிதி சேவையில் ஈடுபட்ட 14 நிறுவனங்களிலிருந்து சொத்து குவிப்பு தொடர்பான ஒரு கோடியே 20 லட்சம் ஆவணங்களை சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு பெற்றுள்ளது. 117 நாடுகளை சேர்ந்த 150 ஊடக நிறுவனங்கள் பணியாற்றும் 600க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் இதில் இடம் பெற்று இருந்தனர்.

இந்த ஆவணங்களில் 90 நாடுகளைச் சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் தொழில் அதிபர்கள், பிரதமர்கள் உட்பட நூற்றுக்கணக்கான நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா 35க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை உருவாக்கியதுடன் அவற்றின் மூலமாக அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் 14 மாளிகைகளை வாங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேயர், பிரிட்டிஷ் விர்ஜின் தீவில் உள்ள ஒரு கம்பெனியை வாங்கியதன் மூலம், இங்கிலாந்தில் உள்ள 88 லட்சம் டாலர் மதிப்புள்ள மாளிகையின் உரிமையாளர் ஆனார். அந்த கட்டிடத்தில் அவருடைய மனைவி செர்ரியின் சட்ட நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

செக் குடியரசு பிரதமர் ஆன்ட்ரெஜ் பேபிஸ், ஈகுவடார் அதிபர் கில்லர்மோ லஸ்சோ, கென்யா அதிபர் உகுரு கென்யட்டா, பாப் பாடகி ஷகிரா, சூப்பர் மாடல் கிளாடியா அதே போல பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பெயர் இல்லாவிட்டாலும், அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் உள்ள அந்நாட்டு நிதி மந்திரி சவுகத் பயாஸ் அகமது தரின் உள்ளிட்டோரின் பெயர்கள் உள்ளன
இதுபோல், ரஷிய அதிபர் புதினுக்கு நெருக்கமான ஒருவரின் பெயரும் அதில் இடம்பெற்றுள்ளது. ரஷியா, அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 130 கோடீஸ்வரர்களின் பெயர்களும் உள்ளன. இதுபோல், 300-க்கு மேற்பட்ட இந்தியர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவர்களில் தொழிலதிபர்கள் அனில் அம்பானி, வினோத் அதானி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், பெண் தொழிலதிபர் கிரண் மசும்தார் ஷா, இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், பெண் தரகர் நீரா ராடியா, சதீஷ் சர்மா உள்ளிட்டோரும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

வெளிநாடுகளில் இந்தியர்கள் சொத்து குவிப்பு தொடர்பான விசாரணையை கண்காணிக்க பல்வேறு விசாரணை அமைப்புகளை அடங்கிய கூட்டுக் குழுவை மத்திய அரசு தற்போது அமைத்துள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம் மதுரை ரிசர்வ் வங்கி நிதிப் புலனாய்வுப் பிரிவு விசாரணை அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் இடம் பெறுகிறார்கள்.