ராணுவ வீரர்களுக்கு குண்டு வெடிப்பினால் உண்டாகும் விபரீத நோய்கள் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

0
137

தன்னலம் பாராமல் தன் உயிரையும் நாட்டிற்கு தருபவர்கள் ராணுவ வீரர்கள். நாட்டிற்காக தங்களது தாய், தந்தையை கூட பிரிந்து போர் புரிபவர்கள். ராணுவ வீரர்களுக்கு போர் பயிற்சி அடிக்கடி அளிக்கப்படும்.

இந்த பயிற்சியின் போது அவர்கள் பல சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அதிலும் குண்டுவெடிப்பின் போது நேரும் அதீத சத்தத்தினால் அவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் என்று அமெரிக்க விஞ்ஞானி ஃபிரடெரிக் தெரிவிக்கின்றார்.

அடிக்கடி அவர்கள் அதிக சத்தத்தை உணர்வதால் கூடுதலாக நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் உள்ளாகிறார்கள் என்று ஆராய்ச்சி செய்ததில் தெரியவந்துள்ளதாக கூறுகிறார். சத்தத்தினால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு “அல்சைமர்” என்ற நோயால் பாதிக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

ராணுவ வீரர்களுக்கு போர் புரியும் போது தான் அபாயம் ஏற்படும் என்று நினைத்து வந்த நிலையில் அவர்கள் அதற்காக பயிற்சி எடுத்துக் கொள்ளும் போதும் எந்த அளவிற்கு மறைமுகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.