நறுமணப் பொருள்களின் ஏற்றுமதி நிலவரம்!!

Photo of author

By Parthipan K

இந்திய நறுமண பொருள்கள் என்றாலே உலகச் சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்கும். ஏனென்றால் அவற்றில் காணப்படும்  தரமும், அதிகமான சுவையும், நறுமணமே காரணம்.

கடந்த நிதியாண்டில் இந்திய நறுமணப் பொருட்களின் ஏற்றுமதி ரூ.21,515.4 கோடியாக அதிகரித்துள்ளது இதற்கு காரணம் சர்வதேச அளவில் கிடைத்த வரவேற்பு ஆகும்.

இதனை வெளிப்படுத்தும் விதமாக கடந்த 2019-20 ஆம் நறுமண பொருள்களின் ஏற்றுமதி மதிப்பின் அடிப்படையில்  ரூ.21,515.4 கோடியாக அதிகரித்தது. அதேபோன்று, அளவின் அடிப்படையில் நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி 11,83,000 டன்னை எட்டியது.

ஒட்டு மொத்த ஏற்றுமதி வருவாயில், மிளகாய், புதினா பொருட்கள், சீரகம், நறுமண எண்ணெய், ஒளியோரசின், மஞ்சள் ஆகியவற்றின் பங்கு பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது,

இந்திய நறுமண பொருள்கள் 185 உலக நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது. கடந்த நிதியாண்டில் மிளகாய்க்கு அதிக தேவை காணப்பட்டிருந்தது எனவே ஏற்றுமதி இயல்பான நிலையை விட 15 சதவீதம் அதிகரித்தது.

அதேபோல் ஏற்றுமதியில் சீரகம் இரண்டாவது இடத்தைப் பிடித்தது இதன் ஏற்றுமதி அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில் முறையே 16% மற்றும் 12 சதவீதம் அதிகரித்தது.

உடனடியாக பயன்படுத்திகூடிய நறுமணப் பொருள்கள் அவைகளுக்கு சர்வதேச சந்தையில் பெரிய அளவில் தேவை காணப்பட்டது.

இந்த நிலையில் அதிக  மதிப்பு கூட்டு பொருட்களுக்கான கொடுப்பதில் இந்தியா உலக சந்தையில் முதலிடத்தை பிடித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மதிப்பு கூட்டுப் பொருட்களின் ஏற்றுமதி நிலையான வளர்ச்சியை எட்டும் என்று நறுமண பொருட்கள் வாரியம் தெரிவித்துள்ளது

 

Exit mobile version