Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்!!CEETA மற்றும் TANCET தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு!!

EXTENDED DATE!!ON AGAIN TO APPLY FOR CEETA AND TANCET EXAM!!

EXTENDED DATE!!ON AGAIN TO APPLY FOR CEETA AND TANCET EXAM!!

அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் தமிழ்நாடு பொது நுழைவு தேர்வு மூலம் MBA MCA மற்றும் ME Mtech MArc Mplan போன்ற முதுகலை பொறியியல் தேர்வுகளுக்கான நுழைவுத் தேர்வு அனைத்தும் தனித்தனியாக நடத்தப்பட இருக்கிறது.

இந்த தேர்வுகள் குறித்து அண்ணா பல்கலைக்கழக செயலாளர் ஸ்ரீதரன் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :-

முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான Mtech Mplan மற்றும் ME போன்ற படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு CHEETA தேர்வு மற்றும் MBA MCA போன்ற மேற்படிப்புகளில் சேர நினைக்கும் மாணவர்கள் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு TANCET 2025 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க https://TANCET.annauniv.edu என்று இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அதற்கான கடைசி தேதி பிப்ரவரி 21ஆம் தேதி என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அதனை பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நீட்டிக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து பிப்ரவரி 26 வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது.

MBA MCA படிப்புகளுக்கு SC ST SCA போன்ற பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்ப கட்டணமாக 500 ரூபாயும் பிற வகுப்பினர் ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும் என இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலே குறிப்பிட்ட சேவை கட்டணம் ஆனது TANSET தேர்வர்களுக்கான விண்ணப்ப கட்டணம்.

CHEETA தேர்வர்களுக்கான விண்ணப்ப கட்டணங்களில் Mtech MArc Mplan போன்ற படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் SC ST SCA பிரிவுகளை சேர்ந்தவராக இருப்பின் அவர்களுக்கு விண்ணப்ப கட்டணமாக 900 ரூபாயும் மற்ற பிரிவினருக்கு 1800 ரூபாயும் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Exit mobile version