Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்!! முதல்வர் மருந்தகம் அமைக்க அழைப்பு!!

EXTENDED TERM!! Chief Minister invites to set up a pharmacy!!

EXTENDED TERM!! Chief Minister invites to set up a pharmacy!!

நாமக்கல் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க நவம்பர் 30-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக, மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :-

நாமக்கல் மாவட்டத்தில், முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கடந்த ஆக.,15ம் தேதி சுதந்திர தின விழா உரையில், பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதல்கட்டமாக, 1,000 முதல்வர் மருந்தகங்கள் ஏற்படுத்தப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார்.

மேலும், முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம், டி.பார்ம் சான்றிதழ் பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் www.mudhalvarmarundhagam.tn.gov.in . என்ற இணைய தளம் நவம்பர் மாதம் 20 ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லை சேர்ந்த டிபார்ம் மற்றும் பி பார்ம் படித்தவர்கள் இந்த வாய்ப்பினை தவறவிடாமல் விண்ணப்பித்து பயன் பெறும் படி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு தெரிவித்துள்ளார்.

Exit mobile version