ஊரடங்கை 2 வாரம் நீட்டிக்க முதல்வருக்கு மருத்துவக் குழு வலியுறுத்தல்!

0
115

மே 10ஆம் தேதி முதல் தொடங்கி 24ம் தேதி முடிய உள்ள ஊரடங்கு நீட்டிக்கக் கோரி மருத்துவக் குழு வலியுறுத்துகிறது.

 

கொரோனாவின் இரண்டாவது அலையில் உச்சம் மற்றும் தொற்றின் எண்ணிக்கை இன்னும் குறையாமல் இருப்பது போன்ற காரணங்களால் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கலாம் என்று மருத்துவ குழு முதல்வருக்கு வலியுறுத்தி உள்ளது.

 

கொரோனா படிப்படியாக அதிகரித்து வருகிறது ஒரு நாளைக்கு 35 ஆயிரத்திற்கும் மேல் தோற்று எண்ணிக்கை அதிகரித்து ஒரு நாளைக்கு 500 க்கு மேல் இறப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க ஞாயிறு முழு ஊரடங்கு,இரவு நேர ஊரடங்கு என போடப்பட்ட பின்னரும் தொற்றுக்களின் எண்ணிக்கை குறையாமல் இருந்து வந்தது.

 

பொதுமக்கள் காட்டும் அலட்சியமே கொரோனா வின் இரண்டாவது அலை உச்சம் பெற்றதற்கான காரணம் என்று சொல்லப்படுகிறது. மே 10 அன்று இரண்டு வாரம் முழு ஊரடங்கு சில தளர்வுகள் உடன் கொடுக்கப்பட்ட போதிலும், மக்களின் அலட்சியத்தால் கொரோனா அதிகரித்ததால் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது. இதனால் ஒரு நாளைக்கு 35 ஆயிரம் பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.

 

மே 24 ஆம் தேதி முடிய உள்ள ஊரடங்கிற்க்கு ஆலோசனை கூட்டம் கூடி உள்ளது. தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலர் ஆலோசனை நடத்தினார். முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

 

இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவர் நிபுணர் குழு ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்குமாறு வலியுறுத்தி உள்ளனர். கொரோனா வின் இரண்டாவது அலையின் உச்சம் இன்னும் குறையாமல் இருப்பதால் தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு அவசியம் என்று மருத்துவர் நிபுணர் குழு வலியுறுத்தியுள்ளது.

 

 

மேலும் ஒரு சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. தனிமையில் உள்ளோரை அதிகம் கண்காணிப்பது, அரசு மற்றும் மற்ற அலுவலகங்களில் அவசர தேவைக்காக மட்டும் வருவது, தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணி தீவிரமாக்குவது, காய்கறி கடைகளை மூடிவிட்டு நடமாடும் காய்கறி கடைகளை ஊக்குவிப்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.