வெளிநாடுகளுக்கான பயணிகளின் விமான சேவைகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த தடை மேலும் நீட்டிப்பு. அதாவது சர்வதேச பயணிகளின் விமான சேவைகளுக்கான தடை பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பான சுற்றறிக்கை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் : “விமான சேவைக்கு நீட்டிக்கப்பட்ட தடையால், பன்னாட்டு சரக்கு போக்குவரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது” என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா ஏறத்தாழ 24 நாடுகளுக்கும் மேல் தனது விமான சேவையை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதில் வந்தே பாரத் என்கின்ற திட்டத்தின் அடிப்படையில் பிரான்ஸ், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் விமான சேவையை நடத்தி வருகிறது இந்தியா.
கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு இருந்தது. தற்போது நடப்பு ஆண்டில் முழு அளவில் உள்நாட்டு விமான சேவைகள் ஆனது கொரோனாவுக்கு முன் இருந்த இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுவதாக விமான போக்குவரத்துத் துறையை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.