துஷார் மேத்தா பதவிக்காலம் 3 ஆண்டுக்கு நீட்டிப்பு! மத்திய அரசு அதிரடி உத்தரவு!!
மத்திய அரசின் ஜெலிசெட்டர் ஜெனரல் எனப்படும் தலைமை வழக்கறிஞர் பதவியில் இருக்கும் துஷார் மேத்தா அவர்களுக்கு பதவிகாலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் எனப்படும் சொலிசிட்டர் ஜெனரல் பதவியில் துஷார் மேத்தா அவர்கள் கடந்த 2018ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். ஏற்கனவே துஷார் மேத்தா அவர்களின் பதவிக்காலம் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் துஷார் மேத்தா அவர்களின் சொலிசிட்டர் ஜெனரல் பதவிக்காலம் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமில்லாமல் உச்சநீதி மன்றத்தின் கூடுதல் சொலிசிட்டர் ஜென்ரல்களாக பணியாற்றும் விக்ரம்ஜித் பானர்ஜி, பல்பிர் சிங், ஐஸ்வர்யா பதி, என் வெங்கடராமன், எஸ்.வி ராஜூ, கே.எம் நடராஜ் ஆகிய ஆறு பேருக்கும் மூன்று ஆண்டுகள் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “தற்போது சொலிசிட்டர் ஜெனரல் பதவியில் இருக்கும் துஷார் மேத்தா அவர்களுக்கு மேலும் மூன்று ஆண்டுகள் பதவிக்காலம் நீட்டிக்கப்படுகின்றது. உச்ச நீதிமன்ற கூடுதல் சொலிசிட்டர் ஜென்ரல்கள் பல்பிர் சிங், ஐஸ்வர்யா பதி, கே.எம் நடராஜ், என். வெங்கடராமன், எஸ்.வி ராஜூ, விக்ரம்ஜித் பானர்ஜி ஆகியோர்களுக்கும் அவரவர்களுக்கு பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்படுகிறது.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் கூடுதல் சொலிசிட்டர் ஜென்ரல் சேத்தன் சர்மா, குஜராத் உயர்நீதிமன்றத்தின் சொலிசிட்டர் ஜெனரல் தேவங் கிரிஷ் வியாஸ், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தின் உயர்நீதிமன்ற கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சத்யபால் ஜெயின், பாட்னா உயர்நீதி மன்றத்தின் கூடுதல் சொலிசிட்டர் கிருஷ்ணா நந்தன் சிங் ஆகியோர்களுக்கும் 3 ஆண்டுகள் பதவிக்காலம் நீட்டிக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.