ஆளுநர் பதிவி நீட்டிப்பு.. போடப்படும் அதிரடி வழக்கு!! மத்திய அரசுக்கு பறந்த கடிதம்!!
தமிழக ஆளுநர் ஆர் என் ரவியின் பதவி காலமானது வரும் மாதத்துடன் முடிவடைய உள்ளது. நாகலாந்தில் இருந்து தமிழகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டது. தற்பொழுது இவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளதால் அடுத்து தமிழக ஆளுநராக யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரும் மத்தியில் உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் எந்த ஒரு மசோதாவிற்கும் ஆளுநர் உடனடி ஒப்புதல் கொடுத்ததில்லை. ஆரம்ப கட்டத்திலிருந்தே திமுக விற்கும் ஆளுநர்-க்கும் ஏகா பொருத்தமாக தான் உள்ளது.
இவர் மத்திய அரசுக்கு அதிகளவு ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர்களுக்காகத்தான் இவர் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார் என்றும் பல குற்றச்சாட்டுகள் இவர் மீது உள்ளது. இவ்வாறு இருக்கும் சூழலில் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் ஆளுநர் டெல்லிக்கு சென்று மோடி மற்றும் அமித்ஷாவை சந்தித்துள்ளார். மேற்கொண்டு தமிழ்நாட்டின் கவர்னராக இவரே நீட்டிக்கப்படத்தான் இந்த சந்திப்பு பேச்சு வார்த்தை என பல தகவல்கள் வெளிவந்த வண்ணமாக உள்ளது.
தற்பொழுது இது குறித்து கேள்வி எழுப்பி சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் துரைசாமி டெல்லிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, கவர்னரின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்ததாக யார் நியமிக்கப்படுவார். மேற்கொண்டு இவரை நியமிக்கப்படும் பட்ச்சத்தில் அது அரசியலமைப்பு சட்டத்திற்கு செய்யும் துரோகம். மேற்கொண்டு இவரே தொடர்வார் என்றால் கட்டாயம் நீதிமன்றத்தில் வழக்கு போடப்படும். ஆளுநர் பதவி குறித்து உங்களது திட்டம் என்ன என்பது குறித்து கேள்வி கேட்டுள்ளார்.