Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு !! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு !!

செமஸ்டர் தேர்வு கட்டணங்களை செலுத்துவதற்கான கால அவகாசம் அக்டோபர் 29-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு கட்டணத்தை செப்டம்பர் 5- ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் மீறும் பட்சத்தில் அவர்கள் பெயரை பட்டியலிலிருந்து நீக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், மாணவர்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த இச்சூழ்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

மேலும், இதனை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பயன்படாத Lab வசதிக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று கல்லூரிகள் வற்புறுத்தியதாக மாணவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனால் செமஸ்டர் தேர்வு கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 19-ஆம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகம் நீடித்தது .இதனைத் தொடர்ந்து மீண்டும் அக்டோபர் 9-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தற்போது அக்டோபர் 29-ஆம் தேதி வரை கல்வி கட்டணத்தை செலுத்த கால அவகாசம் வழங்குவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தற்போது செமஸ்டர் தேர்வு கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version