Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மீண்டும் ஒரு அறிய வாய்ப்பு

veterinary courses

veterinary courses

இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மீண்டும் ஒரு அறிய வாய்ப்பு

சென்னை வேப்பேரியில் உள்ள  கால்நடை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் நாட்டு கோழி கண்காட்சி நடைபெற்றது.

இந்த கண்காட்சியில் சிறுவிடை, பெருவிடை, தனுவாஸ்-அசீல், நந்தனம் கலப்பினம், கடக்நாத், நிக்கோபாரி மற்றும் கிளி மூக்கு வால் உள்ளிட்ட நாட்டு கோழிகள் வகைகள் இடம் பெற்றிருந்தன. இந்த கண்காட்சியை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்வக்குமார் நேற்று பார்வையிட்டார்.

பின்னர் அவர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ 4 இளங்கலை கால்நடை மருத்துவ படிப்புகளில் மொத்தம் 680 இடங்கள் உள்ளன. இதில் இட ஒதுக்கீடு போக மீதமுள்ள 550 இடங்களுக்கு இதுவரை 14 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

தற்போது மருத்துவ படிப்பை போன்று கால்நடை படிப்புக்கும் விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 3 ஆம் தேதி வரை என்று நீட்டிக்கப்பட்டுள்ளது.’ என்று அவர் தெரிவித்தார்.

கால்நடை மருத்துவ படிப்புக்கு கடந்த 12 ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அறிவித்தது போல நாளை மறுதினத்துடன்(26-ந்தேதி) முடிவடைந்த நிலையில் தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version