UGC என்பது அனைவருக்கும் சமமான உயர்தர கல்வியை வழங்குவதற்காக அரசால் அமைக்கப்பட்டதாகும். இந்த அமைப்பு தற்போது தேசிய கல்வி கொள்கை பற்றிய கருத்துக்களை பதிவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த தேசிய கல்வி கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது பற்றிய கருத்துக்களை பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும், மாணவர்களும், பெற்றோர்களும், பேராசிரியர்களும், கல்வியாளர்களும் என அனைவரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு கொண்டு வருகின்றனர்.
தேசிய கல்வி கொள்கை பற்றிய கருத்துக்களை பதிவிடுவதற்கு கடைசி நாளாக அக்டோபர் மாதம் 18-ம் தேதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தேசிய கல்வி கொள்கை பற்றிய கருத்துக்களை பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது, அதாவது வருகின்ற 31ம் தேதியே கடைசி நாள் என UGC அறிவித்துள்ளது.
மேலும் இந்தத் தேசிய கல்வி கொள்கை பற்றிய கருத்துக்களை பதிவிடுவதன் முக்கியத்துவத்தையும், இதற்கு இணையதள வெப்சைட் துவங்கி உள்ளதையும், தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதையும் அனைவருக்கும் தெரியும்படி விளம்பரம் படுத்துமாறு இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் UGC வலியுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.