Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கூடுதல் கட்டணம் கழிக்கப்படும்! மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டம்!

பயன்படுத்தப்படாத மின்சாரத்திற்கு கூடுதலாக கட்டணம் வசூலித்தால் கூடுதல் கட்டணம் அடுத்த முறை கணக்கிடப்படும் மின் கணக்கிலிருந்து கழிக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

மின் கட்டணத்தை பொறுத்தவரை பல்வேறு குளறுபடிகள் நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கொடுத்த பேட்டியில், இதுவரை எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் மின்கட்டண குளறுபடி நடப்பதாக எவரும் புகார் அளிக்கவில்லை.

தகுந்த ஆதாரத்தோடு புகார் அளிக்கும் பட்சத்தில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் கூடுதல் கட்டணம் கட்ட நேர்ந்தால் அடுத்த மின் கணக்கீட்டின் பொழுது கூடுதல் கட்டணம் கழிக்கப்படும் என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Exit mobile version