விவசாயிகளின் உழைப்பை போற்றி அவர்களுக்கு துணை நிற்க வேண்டும்! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

0
118

வருடந்தோறும் டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நாளிலே விவசாயிகளின் உழைப்பை போற்றும் விதமாக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், தேசிய விவசாய தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. நம் நாடு ஒரு விவசாய நாடு விவசாயம் வளர்ந்தால் தான் நம் நாடு வளரும் விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான், நாம் சோற்றில் கை வைக்க இயலும், எனவே நாம் அனைவரும் விவசாயிகளின் கடின உழைப்பை போற்றி அவர்களுக்கு துணை நிற்க வேண்டும்.

மத்திய அரசுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் 28வது தினமாக விவசாயிகள் தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று தெரிவித்து விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், இன்று தேசிய விவசாய தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய வலைதள பக்கத்தில் உலகின் தலைசிறந்த தொழிலான உழவுத் தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாய பெருங்குடி மக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த தேசிய விவசாய தின வாழ்த்துக்கள் என்று அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன், உலகத்திற்கு படியளக்கும் விவசாயியாக இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன் என்று பதிவிட்டு இருக்கின்றார்.