Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி ” – பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்! 

“தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி” – பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்! 

ஆன்லைன் சூதாட்டம் விளையாட்டு தடை அவசர சட்டம் தமிழக அரசால் கடந்த மாத அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், தற்போது தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இது அவசர சட்டம் என்பதால் இன்று அதிகாரப்பூர்வமாக அமலாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அவசரம் சட்டம் குறித்து, பா.ம.க.வின் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது “தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடைச் செய்வதற்க்கான அவசர சட்டத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இதனால் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவது தடுக்கப்படும். ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டதற்கு பின் 29 பேர் தற்கொலை செய்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் வரவேற்கத்தக்கது.

இம்மாத இறுதியில் நடைபெற உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு மாற்றான சட்டத்தை நிறைவேற்றவும், அதை நீதிமன்றங்களில் பாதுகாக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version