Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாலைக்கண் நோய்? இதை குணமாக்க “பால் + மூக்கிரட்டை கீரை” போதும்!!

#image_title

மாலைக்கண் நோய்? இதை குணமாக்க “பால் + மூக்கிரட்டை கீரை” போதும்!!

மாலைக்கண் நோயானது இரவில் அல்லது குறைந்த வெளிச்சத்தில் பார்வை குறைபாடு ஏற்படும் ஒரு நிலை. இவை பரம்பரை நோய், வைட்டமின் ஏ குறைபாடு நோய் என்று அழைக்கப்படுகிறது.

மாலைக்கண் நோய் ஏற்பட காரணம்:-

*வைட்டமின் A குறைபாடு

*பரம்பரை நோய்

*சத்து குறைபாடு

மாலைக்கண் நோய் அறிகுறி:-

*மங்கலான ஒளியில் பலவீனமான பார்வை

*இரவில் வாகனம் ஓட்டும் போது சிரமம்

*மிதமான கண் அசௌவ்கரியம்

இந்த மாலைக்கண் நோயை இயற்கை முறையில் சரி செய்ய வேண்டுமா? அப்போ மூக்கிரட்டை கீரை இதற்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தருவதில் மூக்கிரட்டை கீரைக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இந்த கீரையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் நிறைந்து இருப்பதால் இதை உண்ணுவதன் மூலம் பல நோய் பாதிப்புகளில் இருந்து எளிதில் தப்பிவிட முடியும்.

மூக்கிரட்டை கீரையில் உள்ள சத்துக்கள்:-

*ஆன்டி – ஆக்சிடன்ட்கள்

*கால்சியம்

*வைட்டமின்கள்

மாலைக்கண் நோயை குணமாக்குவது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*பசும்பால் – 1/2 டம்ளர்

*மூக்கிரட்டை கீரை – சிறிதளவு

செய்முறை…

சிறிதளவு மூக்கிரட்டை கீரையை எடுத்து தண்ணீர் கொண்டு சுத்தம் செய்துஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

இதை கிளாஸுக்கு வடிகட்டிக் கொள்ளவும். பின்னர் அரை டம்ளர் காய்ச்சிய பசும்பாலில் இந்த சாற்றை கலந்து பருகவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் மாலைக்கண் நோய் விரைவில் குணமாகும்.

Exit mobile version