Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கண்கள் நன்றாக தெளிவாக தெரிய வேண்டுமா!! அப்போ இந்த வழிமுறைகளை செய்யுங்க!!

கண்கள் நன்றாக தெளிவாக தெரிய வேண்டுமா!! அப்போ இந்த வழிமுறைகளை செய்யுங்க!!

கண்கள் நன்கு தெளிவாக தெரிவதற்கு சில எளிமையான டிப்ஸ் இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். நம் உடலில் முக்கியமான உறுப்பு என்றால் அது கண் தான். கண் இல்லை என்றால் நம்முடைய தினசரி செயல்பாடுகளுக்கு இன்னொருவரின் உதவியை நாம் தேட வேண்டியது வரும்.

கண்கள் உடலில் முக்கியமான உறுப்பாக இருந்தாலும் அதை யாரும் கண்டு கொள்வது கிடையாது. ஆம். நாம் நம்முடைய தலைமுடிக்கு, நகங்களுக்கு, முகத்திற்கு என்று தனி கவனம் செலுத்தும் நாம் இந்த உலகத்தையே பார்க்க வைக்கும் கண்களின் பாதுகாப்பை பற்றி மறந்து விடுகிறோம்.

கண்களின் ஆரோக்கியத்திற்காக எந்தவொரு நடவடிக்கையையும் நாம் செய்வது இல்லை. அதாவது நீண்ட நேரம் கண் விழித்திருப்பது, மின்னணு சாதனங்களை தொடர்ந்து பயன்படுத்துவது, சரியாக தூங்காமல் இருப்பது, ஊட்டச்சத்துக்கள் இருக்கும் உணவை தவிர்த்தல் போன்ற காரணங்களால் நம்முடைய கண்கள் பாதிப்படைகின்றது.

எனவே கண்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும், தெளிவாக தெரியவும் சில வழிமுறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

கண்கள் தெளிவாக தெரிய சில வழிமுறைகள்…

* கண்கள் தெளிவாக தெரிய வேண்டும் என்றால் முன்பு கூறியது போல சரியாக தூங்க வேண்டும். நாளுக்கு 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.

* தொடர்ந்து அதிக நேரம் டிவி, லேப்டாப், மொபைல் போன் போன்ற மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

* நாம் நமது உள்ளங்கைகளால் நமது கண்களை மூடிக் கொண்டு சில நிமிடங்கள் கண் பயிற்சி செய்ய வேண்டும்.

* மீன், பப்பாளி, கேரட் போன்ற கண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ள உணவை நாம் சாப்பிட வேண்டும்.

* அதிக வெயில் காலங்களில் கண்களுக்கு கருப்புக் கண்ணாடி போட்டு வெளியே செல்லலாம்.

* தினசரி இரண்டு லிட்டர் முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் கண் பார்வை மேம்படும்.

* இரவு நேரங்களில் தூங்காமல் கண் விழித்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

* கண் பார்வை தெளிவாகத் தெரிவதற்கு தினசரி கண்களை சுத்தமான தண்ணீரால் கழுவ வேண்டும்.

* அடிக்கடி கண்களை நம் கை கொண்டு கசக்குவதை தவிர்க்க வேண்டும்.

* கண்கள் பாதுகாப்பாகவும், தெளிவாகவும் தெரிவதற்கு முக்கியமான டிப்ஸ் இது தான். கண்டிப்பாக புகைப்பழக்கத்தை நிறுத்த வேண்டும்.

Exit mobile version