Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கும் இருட்டில் கூட கண் பார்வை தெளிவாக இருக்கும்.. இதை 1 ஸ்பூன் சாப்பிட்டால்..!

#image_title

கும் இருட்டில் கூட கண் பார்வை தெளிவாக இருக்கும்.. இதை 1 ஸ்பூன் சாப்பிட்டால்..!

கண் பார்வை குறைபாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கண் இல்லையென்றால் வாழ்க்கையே இருட்டாகி விடும்.. ஒவ்வொரு நிமிடத்தையும் யாருடைய உதவி இன்றி நகர்த்துவது ரொம்ப சிரமம்.

கண்ணை கவனிப்பதில் தனி அக்கறை இருக்க வேண்டும். சிறு வயதில் கண்ணாடி போடும் நிலையை சந்தித்து விடக் கூடாது என்றால் கண் பார்வையை தெளிவாக்கும் முறையை தொடர்ந்து பின்பற்றி வர வேண்டும்.

கண்ணில் உள்ள குறைபாடு அனைத்தும் நீங்கி கண் பார்வை முழுமையாக தெளிவு பெற தினமும் இதை 1 ஸ்பூன் பாலில் கலந்து குடித்து வாருங்கள்.

சோம்பு
பாதாம் பருப்பு
கற்கண்டு
மிளகு

ஒரு மக்ஸி ஜாரில் 1 ஸ்பூன் சோம்பு(பெருஞ்சீரகம்), 4 பாதாம் பருப்பு, 1 ஸ்பூன் கற்கண்டு மற்றும் 4 மிளகு சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து 1 கிளாஸ் பால் ஊற்றி காய்ச்சவும். பால் கொதிக்கும் பொழுது 1 ஸ்பூன் அளவு அரைத்த பொடி சேர்த்து காய்ச்சி ஒரு கிளாஸுக்கு மாற்றி குடிக்கவும்.

இதை இரவு நேரத்தில் குடிப்பதன் மூலம் விரைவில் பலனைக் கண்கூடாக பார்க்க முடியும்.

Exit mobile version