Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முகம் பால் போன்று வெள்ளையாக.. மூன்று பொருள் கொண்ட பச்சை பயறு பேஸ் பேக் போதும்!!

Green Gram Face Pack: பெண்கள் தங்கள் முகத்தின் நிறத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.முகத்தின் நிறத்தை மாற்ற அதிக செலவு செய்து க்ரீம் வாங்கி பயன்படுத்த வேண்டுமென்ற அவசியம் இல்லை.வீட்டில் இருக்கின்ற பச்சை பயறை கொண்டு சருமத்தை அதிகரிக்கும் பேஸ் பேக் தயாரித்து பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:-

1)பச்சை பயறு – இரண்டு தேக்கரண்டி
2)கெட்டி தயிர் – ஒரு தேக்கரண்டி
3)ரோஸ் வாட்டர் – 1/4 தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

முதலில் ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி பச்சை பயறு போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.குறைந்தது 5 மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.

ஸ்டெப் 02:

பிறகு தண்ணீரை வடித்துவிட்டு பச்சை பயறை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 03:

பிறகு இந்த பச்சை பயறு பேஸ்ட்டை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு கெட்டி தயிர் ஒரு தேக்கரண்டி அளவு அதில் சேர்த்து நன்றாக குழைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 04:

அடுத்து அதில் கால் தேக்கரண்டி பன்னீர் அதாவது ரோஸ் வாட்டர் சேர்த்து குழைத்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 05:

இந்த பேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்து அரை மணி வரை உலரவிட்டு க்ளீன் செய்ய வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தின் நிறம் அதிகரிக்கும்.

பச்சை பயறு பேஸ் பேக் நன்மைகள்:

**இந்த பருப்பில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகளவு நிறைந்திருக்கிறது.இதை சருமத்திற்கு பயன்படுத்தும் பொழுது சருமம் பளபளப்பாக மாறும்.

**பச்சை பயறு பேஸ் பேக் முகத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.சரும வறட்சி பிரச்சனை இருப்பவர்கள் இந்த பேஸ் பேக் பயன்படுத்தலாம்.

**முகத்தில் உள்ள பருக்கள்,எண்ணெய் பிசுபிசுப்பு நீங்க பச்சை பயறு பேஸ் பேக் பயன்படுத்தலாம்.

**தொடர்ந்து பச்சை பயறு பேஸ் பேக் பயன்படுத்தி வந்தால் சருமத் துளைகள் முழுமையாக அகலும்.

**முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் அகல பச்சை பயறு பேஸ் பேக் பயன்படுத்தலாம்.

**முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி முகத்திற்கு புது பொலிவை பச்சை பயறு பேஸ் பேக் கொடுக்கிறது.

Exit mobile version