Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பேஸ்புக் என்னும் மாயை : சைபர் கிரைம் போலீசார் சொல்வது என்ன?

#image_title

பேஸ்புக் என்னும் மாயை : சைபர் கிரைம் போலீசார் சொல்வது என்ன?

நம் தமிழ்நாட்டின் மட்டும் நொடிக்கு நொடி ஆயிரக்கணக்கான மக்கள் பேஸ்புக் எனப்படும் முகநூலை பயன்படுத்தி வருகின்றனர். இந்த முகநூல் வலைத்தளத்தில் நிறைய ஆபத்துகளும் மறைந்து இருந்தாலும் சில நல்ல விஷயங்களும் உள்ளன  ஆனால் இதனை பலரும் தவறாக பயன்படுத்தி பிரச்சனையில் சிக்குவதும் உண்டு.

தற்போது நிறைய பேர் போலி முகநூல் கணக்கென்று தெரிந்தும் ஆபாச முகநூல் கணக்கை ஆராய்ந்து தேடி பார்க்கின்றனர். ஆபாச முகநூல் கணக்கை வைத்திருப்பவர்களுடன் சாட் செய்து தகவல்களை பரிமாறி குறுஞ்செய்தி அனுப்புகின்றனர்.

ஒரு கட்டத்தில் ஆபாச குறுஞ்செய்திகளை தொடர்ந்து அனுப்பி வரும் போது, நம்மை போலி முகநூல் கணக்கு வைத்திருப்பவர்கள் மிரட்ட தொடங்குவர். பிறகு நம்மிடம் இருந்து கூகுள்-பே, போன்-பே மூலம் ஆயிரக்கணக்கில் மிரட்டி பணம் வாங்குகிறார்கள். எங்கே வெளியே சொன்னாலும் மானம் போய் விடும்! என்ற பயத்தில் பலரும் வெளியே சொல்லாமல் அமைதி காத்து வருகின்றனர்.

இது ஒரு நெட்வொர்க்காக செயல்பட்டு வருகிறது. மற்றொருபுறம் சில இளைஞர்கள் தனிநபராக இருந்து இதனை தினசரி வேலையாகும் செய்து வருகின்றனர். இவர்களையெல்லாம் சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். சில போலி முகநூல் கணக்குகளை முடக்கியுள்ளனர். முன்பின் தெரியாத நபர்களுடன் முகநூல் உள்ளிட்ட எந்த ஒரு சமூக வலைத்தளங்களில் கூட குறுஞ்செய்தி அனுப்புவது மற்றும் தனிப்பட்ட விவரங்களை பகிர வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Exit mobile version