Breaking: பேஸ்புக்கின் பெயரை மாற்றிய நிறுவனம்.!! இனி இந்த பெயர் தான்.?

0
202

பேஸ்புக்கின் பெயரை அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் மாற்றியுள்ளார்.

அன்றாட வாழ்க்கையில் பொதுமக்கள் தற்போது செல் போன்களை பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது. அதேபோல், வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளையும் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, பேஸ்புக் சமூக வலைதளைதளகளின் ராஜாவாக திகழ்கிறது. இந்த செயலிகளின் மூலமாக அன்றாட உரையாடல்கள், முக்கியமான தகவல்கள் மற்றும் பொழுதுபோக்கு இதன் மூலம் பகிர்ந்து வருகின்றனர். தற்போது, இந்த செயலிகளுக்கு சிலர் அடிமையாகவே மாறிவிட்டனர்.

அந்த வகையில், தற்போது பேஸ்புக் நிறுவனம் தங்களின் பயனார்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை வழங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி, பேஸ்புக் நிறுவனம் தனது பெயரை மாற்றியுள்ளது. இனிவரும் காலங்களில் பேஸ்புக் ‘மெட்டா’ என்று அழைக்கப்படும் என பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.