Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

41 லட்சத்தை வென்ற பேஸ்புக் பயனாளர்!! முடக்கப்பட்ட கணக்கால் இழப்பீடு!!

#image_title

41 லட்சத்தை வென்ற பேஸ்புக் பயனாளர்!! முடக்கப்பட்ட கணக்கால் இழப்பீடு!!

அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள கொலம்பஸ் நகரில் வசித்து வருபவர் ஜெசன் கிரவ்பொர்ட். இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு இவரின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டது. இது குறித்து அவர் கூறியதாவது, ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்தவுடன் என் செல்போனில் பேஸ்புக் கணக்கை திறக்கும் போது அது முடக்கப்பட்டிருந்தது.

நான் பேஸ்புக் கணக்கில் இருந்து தடை செய்யப்பட்டதாக கூறி, அதற்காக கூறிய விளக்கத்தில் குழந்தைகள் சம்மந்தமான ஆபாச படங்களை நான் பார்த்ததாகவும், பேஸ்புக் நிறுவனத்தின் விதிகளை மீறி செயல்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

ஆனால் நான் இதுபோன்ற பதிவுகளை பார்கவில்லை என்றும், தனது கணக்கை மீண்டும் தொடர வேண்டும் என்றும் பேஸ்புக் நிறுவனத்தை நாடி உள்ளார். ஆனால் பேஸ்புக் நிறுவனம் இவருக்கு பதில் அளிக்காததால் பயனாளரின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

எனவே வழக்கறிஞர் ஜெசன், பேஸ்புக் நிறுவனத்தின் மீது மாகாண கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணையில், பேஸ்புக் நிறுவனத்தால் இதற்கு தகுந்த பதில் அளிக்க முடியவில்லை.

எந்த வித காரணமும் இன்றி ஜெசனின் கணக்கு முடக்கப்பட்டதால் பேஸ்புக் நிறுவனம் பயனாளருக்கு 50 ஆயிரம் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 41 லட்சத்து 11 ஆயிரத்து 250 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோர்ட்டில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஜெசனின் முடக்கப்பட்ட கணக்கு செயலுக்கு வந்துள்ளது. ஆனால் பேஸ்புக் நிறுவனம் இழப்பீடு தொகையான 50 ஆயிரம் டாலரை பயனாளருக்கு வழங்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version