இனி வருடந்தோறும் ரூ 1000 கிடைக்கும் வசதி.. அரசின் மாஸ் திட்டம்!! இனி கவலையே இல்லை!!
திமுக ஆட்சி அமைத்து மகளிருக்கான கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தியது. இதில் முதல் முறை ஒரு கோடி க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பணம் வழங்கப்பட்டது. இந்த உரிமத்தொகை பெறுவதற்கு குறிப்பிட்ட சில விதிமுறைகள் இருந்த பட்சத்தில் பலருக்கும் இந்த தொகை கிடைக்காமல் போனது. நாளடைவில் பல தரப்பிலிருந்தும் இதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல தகுதி பெற்றும் பலருக்கும் இந்த உரிமை தொகையானது கிடைக்காமலும் இருந்தது.
இதனையெல்லாம் சரி செய்யும் பொருட்டு தமிழக அரசானது இரண்டாவது முறையாக மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை வெளியிட்டது. இதில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனிடையே மக்களவைத் தேர்தல் இடைத்தேர்தல் என அடுத்தடுத்து வர நேரிட்டதால் ஒப்புதல் அளித்தும் அவர்களுக்கு பணம் செலுத்தாமல் இருந்தது.
தற்பொழுது தேர்தல் முடிவடைந்த நிலையில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்ட மகளிர்களுக்கு உரிமைத் தொகையானது செலுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இனி வருடம் தோறும் புதிய பயனாளிகள் கலைஞர் உரிமைத்தொகை கீழ் இணையப்படுவார் என்றும் அதேபோல மீண்டும் விண்ணப்ப படிவங்கள் வெளியிடப்படும் எனவும் அரசு சார் ஊழியர்கள் கூறியுள்ளனர்.
குறிப்பாக அரசு ஊழியர்களின் மனைவிகள் இறந்த அரசு ஊழியர்களின் மனைவிகள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் உள்ளிட்டோருக்கு இந்த உரிமைத்தொகை வழங்க இருப்பதாலும் மேலும் மறுவாழ்வு மையத்தில் இருக்கும் பெண்களுக்கும் வழங்கப்பட உள்ளதால் அடுத்த மாதம் இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். கடந்த முறை ரத்து செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.