12 ஆம் வகுப்பில் தோல்வியா.. இது தான் கடைசி வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க!! தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட முக்கிய தகவல்!!
தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வானது மார்ச் மாதம் முதல் தேதியிலேயே தொடங்கி அம்மாதம் 22 ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்த பொது தேர்வுக்கான முடிவானது இம்மாதம் 6 ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. அந்த வகையில் நேற்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த வருடம் பொது தேர்வானது 7 லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் எழுதியதில் 7 லட்சத்து 19 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிக சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த பொதுத்தேர்வில் தங்களது மதிப்பெண்ணில் சந்தேகம் உள்ளவர்கள் அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் மறு கூட்டல் அல்லது தங்களது விடைத்தாள் நகலை பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் கூறியிருந்தது. அதன் படி இன்று காலை 11 மணியளவில் இந்த விண்ணப்ப பதிவு தொடங்கி வரும் பதினொன்றாம் தேதி மாலை 5 மணி வரை இதற்கான காலக்கெடுவை கொடுத்துள்ளனர்.
விண்ணப்பிக்க நினைக்கும் மாணவர் மற்றும் மாணவியர் குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேற்கொண்டு மாணவர்கள் மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் என இரண்டுக்கும் ஒரே முறையில் விண்ணப்பிக்க இயலாது. ஏதாவது ஒன்றுக்கு தான் விண்ணப்பிக்க முடியும் என்றும் மாணவர்கள் நன்றாக சிந்தித்து எதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதில் முடிவெடுக்க வேண்டும் எனவும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.