Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த கார் மற்றும் டிப்பர் லாரிக்கு தீ வைத்த மர்ம நபர்! வீட்டிற்கும் தீ வைப்பு! 

#image_title

வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த கார் மற்றும் டிப்பர் லாரிக்கு தீ வைத்த மர்ம நபர்! வீட்டிற்கும் தீ வைப்பு! 

பாலக்காட்டில் பைசல் என்பவரது வீட்டிற்கும் வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த கார் மற்றும் டிப்பர் லாருக்கும் மர்ம நபர் தீ வைப்பு:கார் எரிந்து முற்றிலும் நாசம்.

கேரளா மாநிலம் பாலக்காடு குமரநெல்லூர் காஞ்சிரத்தாணி பகுதியை சேர்ந்தவர் பைசல் இன்று அதிகாலை இவரின் வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் வீடு மற்றும் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு தீ வைத்துள்ளனர்.

இதில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் முற்றிலும் எரிந்து நாசமானது. தீ விபத்தில் வீடும் சேதமடைந்தது. டிப்பர் லாரிக்கும் தீ வைத்து எரித்துள்ளனர்.

இந்த தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version