Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நண்பர்களின் மீதான நம்பிக்கை! ஆட்டோ டிரைவரை தாக்கிய வாலிபர்!

Faith in friends! The teenager who attacked the auto driver!

Faith in friends! The teenager who attacked the auto driver!

நண்பர்களின் மீதான நம்பிக்கை! ஆட்டோ டிரைவரை தாக்கிய வாலிபர்!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை புது காலனி  பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (33). இவர் ஆட்டோ வாடகைக்கு ஓட்டி வருகிறார்.  அதே பகுதியை சேர்ந்த செந்தில் என்கின்ற செந்தில் முருகனுக்கும்   இடையே சிறிய தகராறு ஒன்று ஏற்பட்டது.

இந்நிலையில் ஜெயக்குமார் தேவர் நகர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது செந்தில் மற்றும் தேவர் நகரை சேர்ந்த விஜி (33). பாபு ஆகியோர் ஜெயக்குமாரை வழிமறித்துள்ளனர். பின்பு அவர்கள் ஜெயகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அந்த வாக்குவாதத்தில்   ஜெயக்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மேலும் அந்த தாக்குதலில் காயம் அடைந்த ஜெயக்குமாரரை அக்கம் பக்கத்தினர் மீட்டு   ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு ஜெயகுமார்  சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த தகராறு குறித்து ஆசாரிப்பள்ளம் போலீசார்ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் போலீசார் விசாரணையில் ஜெயக்குமார்களுக்கும் செந்தில் என்கின்ற செந்தில் முருகனுக்கும் இடையே நடந்த பிரச்சனையின் விளைவே இந்த தகராறு ஏற்பட காரணம் என கூறப்படுகிறது. மேலும் செந்தில் மற்றும் விஜயை போலீசார் கைது செய்தனர். பாபு தலை மறைவு ஆகிவிட்டார் அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Exit mobile version