தற்போது ஜி.எஸ்.டி என்பது நாட்டு முழுவதும் ஒரே மாதிரியாக கொண்டுவரப்பட்டது. முன்பு எல்லாம் மாநிலம் தகுந்த மாதிரி ஜி.எஸ்.டி வேறுபடும் ஆனால் தற்போது அப்படி இல்லை. இதில் அதிகமாக மோசடி நடந்து வருகிறது. அதனை தடுக்க தற்போது மாநில அரசு ஒரு விசாரணை குழு அமைத்து அதில் கடந்த ஆண்டு மே மாதம் 16-ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 15-ம் தேதி வரை ஜி.எஸ்.டி-யின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருந்த சுமார் 21,791 நிறுவனகள் மூலம் கிட்டத்தட்ட 24,010 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக கண்டறிந்தனர்.
மேலும் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி முதல் அதே மாதம் 30-ம் தேதி வரை சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இது நாடு முழுவதும் விசாரணை செய்யப்பட்டது. அதில் ஜி.எஸ்.டி-யின் கீழ் பதிவு செய்யப்பட்டு 73,000 நிறுவனங்களை சோதனை செய்த போது அதில் சுமார் 18,000 போலி நிறுவனக்கள் இருந்தது கண்டுபிடிக்பட்டது. அதில் அவர்களிடம் இருந்து தற்போது சுமார் 70 கோடி ரூபாய் வந்து விட்டதாகவும் கூடபட்டுள்ளது. அதில் மீதி தொகை அவர்கள் தாமாக செலுத்தும்படி ஜி.எஸ்.டி மத்திய அரசு தெரிவித்துள்ளது.