போலி மருத்துவர்களை கண்டறிந்த காவல்துறையில் புகார் தெரிவிக்க அனைத்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலகங்களுக்கு இந்திய மருத்துவ இயக்குனர் கணேஷ் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா உறுதியானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், அலோபதி மட்டுமன்றி சித்தா, யுனானி, ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம் மற்றும் இந்திய மருத்துவக் கழகத்தின் மருத்துவர்கள் தங்கள் பதிவு செய்த மருத்துவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி அளித்துள்ளனர்.
இந்நிலையில் போலி டாக்டர்களை கண்டறிந்து, அவர்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பியிடம் தகவல் தெரிவிக்க அனைத்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் கண்காணிப்பு குழு அமைச்சகம், மாதம்தோறும் அறிக்கை தயாரித்து மருத்துவ இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனர் கணேஷ் உத்தரவிட்டுள்ளார்.