நோயிலிருந்து சிறுமியை குணப்படுத்துவதாக கூறி சிறுமியிடம் சில்மிஷம் போலி மந்திரவாதி கைது!
கேரளா மாநிலம் மலப்புரம் வளாஞ்சேரியை சேர்ந்த ஒருவர் தனது மகளுக்கு உடல்நிலை பாதிக்கபட்ட நிலையில் அவரை குணப்படுத்துவதாக கூறி தனூர் ஓதும்புரத்தை சேர்ந்த முஹம்மது ரஃபி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின் பூஜைக்கள்,சடங்குகள் என கூறி பல முறை செய்துள்ளார்.இதற்காக ஒரு லட்ச ரூபாய் பணம் வாங்கியுள்ளார்.
மேலும் பூஜை செய்யும் போது சிறுமியை மட்டும் வைத்து அவர்களின் வீட்டிலேயே பலமுறை தனியாக சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் சிறுமி இயல்புக்கு மாறான நடந்ததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், சிறுமியிடம் விசாரித்தபோது அத்துமீறியது தெரியவந்தது. இது குறித்து விசாரித்து போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து அவரை வளாஞ்சேரி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.கைதான முஹம்மது ரஃபி பல்வேறு இடங்களில் போலீஸ் வேடமணிந்து பணம் வசூலித்ததாகவும், அவர் மீது அரிக்கோடு, திரூர், திருரங்கடி, தனூர் ஆகிய காவல் நிலையங்களில் பல மோசடி வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். குற்றவாளியை திரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.