நிர்வாண பூஜையில் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலி பூசாரி கைது!!

0
194
#image_title

ஆந்திர மாநிலத்தில் நிர்வாண பூஜையில் ஒரு மணி நேரம் உட்கார்ந்து இருந்தால் 50,000 ரூபாய் தருவதாக கூறி இரண்டு பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலி பூசாரி உட்பட 12 பேர் ஆந்திராவில் கைது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த போலி பூசாரி நாகேஸ்வரராவ். இவரது தொழில், விலை நிலங்களின் தேங்காய் வைத்து நீரோட்டம் பார்ப்பது. இந்நிலையில் தற்போது இதில் வருமானம் இல்லாததால் பில்லி சூனியம் வைப்பது எடுப்பது என்பது போன்ற சித்து வேலைகளை செய்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் தொடர்ந்து பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தார்.

மேலும் பழங்கால நாணயங்களை வைத்து புதையல் எடுப்பதற்காக பூஜை செய்து வருவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்
நாகேஸ்வர ராவ், தன்னுடைய நண்பர் நாகேந்திரபாபு என்பவரிடம், ஒரு மணி நேரம் நடைபெறும் நிர்வாண பூஜையில் உட்கார்ந்து பூஜை செய்ய இளம் பெண்கள் தேவை, அவர்களுக்கு தலா 50,000 பணம் கொடுக்கிறேன் என்று கூறினார்.

இதன் மூலம் எனக்கு சிறிய அளவில் புதையல் கிடைக்கும் உனக்கும் அதில் பங்கு கொடுக்கிறேன் என்று கூறினார். இதை நம்பிய நாகேந்திர பாபு தனக்கு பழக்கமான பெண்ணான ராதாவை அணுகியுள்ளார். ராதா ஏற்கனவே பியூட்டி பார்லர் வைத்து நஷ்டம் அடைந்த நிலையில் இதனை ஒப்புக்கொண்டு மேலும் ஒரு பெண்ணை அழைத்து வந்துள்ளார். நாகேஸ்வரராவ், நாகேந்திர பாபு ஆகிய இருவரும் சேர்ந்து அவர்களை குண்டூரில் உள்ள ஒரு லாட்ஜில் தங்க வைத்தனர்.

கடந்த ஒன்பதாம் தேதி இரண்டு பெண்களையும் குண்டூர் அருகே பூனக்கல்லு கிராமத்தில் உள்ள போலி பூசாரி நாகேஸ்வரராவின் வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு நிர்வாண பூஜை மேற்கொண்டனர். அப்போது இரண்டு இளம் பெண்களையும் ஒரு அறையில் அடைத்து வைத்த பூசாரி நாகேஷ்வர ராவ் இரண்டு பெண்களையும் நிர்வாணமாக்கி பூஜை என்ற பெயரில் அவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடமுயன்றதாக தெரியவந்துள்ளது.
இதற்கு அந்த பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே பூஜை பாதையில் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் மறுநாள் காலை அங்கு வசிக்கும் பொதுமக்கள் நாகேஸ்வரராவை அழைத்து இங்கு என்ன நடக்கிறது என்று கேள்வி எழுப்பினர். இதனால் அச்சமடைந்த நாகேஸ்வரராவ் இரண்டு பெண்களையும் அழைத்து கொண்டு சிலக்கலூர் பேட்டையில் உள்ள தன்னுடைய நண்பர் வீட்டிற்கு சென்றார் அங்கு கடந்த 11ஆம் தேதி மீண்டும் நிர்வாண பூஜை நடத்த முயன்றார். அப்போது மீண்டும் அந்த பெண்களிடம் நாகேஸ்வரராவ் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயற்சித்தார்.

இதனால் பயந்து போய் அங்கிருந்து தப்பி ஓடிய இரண்டு பெண்களும் தங்களுடைய செல்போனில் இருந்த திசா செயலி மூலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த நல்லபாடு போலீசார் இரண்டு பெண்களையும் மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இரண்டு பெண்களும் அளித்த தகவலின் அடிப்படையில் போலி பூசாரி நாகேஸ்வரராவ், அவருக்கு உதவிய நாகேந்திர பாபு ஆகியோர் உள்பட 12 பேரில் இரண்டு பெண்களை கைது செய்த போலீசார் மேலும் சிலரை தேடி வருகின்றனர்.இந்த விவகாரத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.