உயிரை பறிக்கும் போலி மதுபானக்கூடம்!!முன் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!!

0
159
#image_title

உயிரை பறிக்கும் போலி மதுபானக்கூடம்!!முன் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!!

திண்டுக்கல் அருகே பள்ளப்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பழனி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இரண்டு போலி மதுபானக்கூடத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை படுஜோர் .தற்போது விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 13 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது திண்டுக்கல் அருகே போலி மதுபான கூடம் இயங்கி பொதுமக்களின் உயிரை பறிக்கும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

திண்டுக்கல் பழனி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளப்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட இரு வேறு இடங்களில் மதுரை செல்லும் வழியில் அனுமதியின்றி போலி மதுபானக்கூடம் ஒன்றும் ,பழனி செல்லும் சாலையில் போலி மதுபான கூடம் ஒன்றும் இயங்கி வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் அரசு மதுபானக்கூடங்கள் மற்றும் அரசு மது கடைகள் இயங்குவதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இங்கு போலி மதுக்கள் விற்பனை செய்வதற்காக அனுமதி இல்லாமல் மதுக்கூடங்கள் நடைபெற்று வருகிறது.

மேலும் அரசு மதுபான கடை இல்லாத பகுதிகளில் சட்ட விரோதமாக கள்ளச் சந்தையில் 24 மணி நேரமும் மதுபான விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை காவல்துறையினர் மற்றும் மதுவிலக்கு துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்பொழுது விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 13 நபர்கள் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து உயரும் நிலையில் திண்டுக்கல்லில் நடைபெறும் போலி சந்தை மது விற்பனையை அதிகாரிகள் உடனடியாக தடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.