Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கள்ளக்காதல் கொலைகள்! பட்டியலில் முதலிடம் பிடித்த மாவட்டம் இதுதான்!! என்.சி.ஆர்.பி அறிக்கை!

கள்ளக்காதல் கொலைகள்! பட்டியலில் முதலிடம் பிடித்த மாவட்டம் இதுதான்!!
என்.சி.ஆர்.பி அறிக்கை!

தேசிய குற்றப் பதிவு பணியாகம்,பதிவான குற்றவியல் வழக்குகளின் அடிப்படையில் சில புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது.அதில் தமிழ்நாட்டில் சென்னை முதலிடம் பிடித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அதில் கடந்த 2019 ஆம் ஆண்டில் சென்னையில் கள்ளக்காதல் தொடர்பாக மொத்தம் 28 கொலைகள் நடந்துள்ளதாகவும்,
இதில் சென்னை பட்டியலில் முதல் மாவட்டமாக திகழ்வதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
சாதாரண தகராறு காரணமாக சென்னையில் சுமார் 90 கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.இது 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 19 பெருநகரங்களில் இந்தச் சம்பவம் அதிகரித்துள்ளது.அந்த இடத்தில் 125 வழக்குகளுடன் டெல்லி முதலிடத்திலும் 90 வழக்குகளுடன் சென்னை இரண்டாவது இடத்திலும் இடம் பெற்றுள்ளது.

வயதானவர்கள் படுகொலை வழக்கில்,இந்தியாவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டில் 117 வயதானவர்கள் படுகொலை வழக்குகள் பதிவாகியுள்ளது.209 கொலை வழக்குகளுடன் உத்திரபிரதேசம் மாநிலம் இந்தியாவில் முதல் இடத்தில் உள்ளது.

இதுமட்டுமின்றி சென்னையில்குடும்ப தகராறு காரணமாக 60 கொலை வழக்குகளும் சிறிய தகராறு காரணமாக 34 கொலை வழக்குகளும் தனிப்பட்ட பகை காரணமாக 52 கொலை வழக்குகளும் பதிவாகியுள்ளதாக
என்.சி.ஆர்.பி கூறியுள்ளது.

சென்னை போன்ற பெரு நகரங்களில் இதுபோன்ற கொலை முயற்சிகளை தடுப்பதற்கு ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தனியாக வசிக்கும் முதியவர்களின் விவரங்களை சேகரிக்க அனைத்து நகர காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும்,
சென்னை காவல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Exit mobile version