Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரசிகர்களை ஏமாற்றிய புகழ் மற்றும் சிவாங்கி!! குக் வித் கோமாளி ரசிகர்களே இதப் பாருங்க!!

Fame and Sivanki who deceived the fans !! Crane with clown fans check this out !!

Fame and Sivanki who deceived the fans !! Crane with clown fans check this out !!

ரசிகர்களை ஏமாற்றிய புகழ் மற்றும் சிவாங்கி!! குக் வித் கோமாளி ரசிகர்களே இதப் பாருங்க!!

தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக இருக்கும் தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சியில். இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் மக்களை கவரும் வண்ணம் இருக்கும். மேலும் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சீரியல்களுக்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். விஜய் டிவியின் குக் வித் கோமாளி உலக அளவில் புகழ்பெற்ற நிகழ்ச்சிகள். இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் தனது கோமாளியை தேர்ந்தெடுத்து பல ஃபன்னான முறையில் சமையல் செய்யும் நிகழ்ச்சி ஆகும்.

இந்த நிகழ்ச்சிக்கு சீசன் ஒன்றைவிட சீசன் இரண்டுக்கு பெருமளவு ரசிகர்கள் அதிகமாக  தொடங்கியது. இரண்டாவது சீசன் வெற்றியை தேடி தந்தது. இதற்கு குறிப்பாக நிகழ்ச்சியில்  கோமாளிகளாக இருந்த விஜய் டிவியில் காமெடி பிரபலங்கள் தான். அதிலும் குறிப்பாக புகழ்.  பாலா. சரத். சூப்பர் சிங்கர் சிவாங்கி. வி ஜே. மணிமேகலை போன்ற பிரபல காமெடி நடிகர்கள் தான் இந்த நிகழ்ச்சி உச்சத்தை அடைந்தது. இதில் குறிப்பாக புகழ் மற்றும் சிவாங்கி இவர்களின் அண்ணன் தங்கை பாசம் உலக அளவில் ரீச் ஆனது. மேலும் இவர்களின் அண்ணன் தங்கை பாசத்தை கண்டு உண்மையான அண்ணன் தங்கைகள் கூட பொறாமைப்படும் அளவிலும், இதுபோல் ஒரு அண்ணன் அல்லது தங்கை கிடைக்கவில்லையே என்று பொறாமை படும் வகையிலும் இவர்களின் பாசப்பிணைப்பு இருந்தது.

இவர்கள் இவருக்காகவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களுக்கு தற்போது சோக செய்தி ஒன்று வந்துள்ளது. அது என்னவென்றால் வரும் செப்டம்பர் மாதம் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி துவங்க இருக்கிறதாம். மேலும் இந்த நிகழ்ச்சியில் புகழ் மற்றும் சிவாங்கி கலந்து கொள்ள மாட்டார்கள் என்ற சோக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் சீசன் 2க்கு பிறகு தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியாக இருப்பதால் இவர்கள் சீசன் 3 இல் ஒளிபரப்பாகும் சிறப்பு நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்ற செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் இதைப்பற்றி குக் வித் கோமாளி குழுவோ அல்லது சிவாங்கி மற்றும் புகழ் ஆகியோர் யாரும் அதிகாரப்பூர்வமாக வெளியிட வில்லை. மேலும் இது எந்த அளவிற்கு உண்மை என்பதும் தெரியவில்லை. ஆனால் இப்படி நடந்தால் குக் வித் கோமாளி சீசன் 3 சிறிது போராகவே இருக்கும் என்று மட்டும் தெளிவாக தெரிகிறது.

Exit mobile version