Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதல்வருக்கு சவால் விட்ட விவசாய சங்கங்கள்!

2ஜி விவகாரத்தில் விவாதம் செய்வதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ராசா அழைப்பு விடுத்திருந்தார் ஆனாலும் தன்னுடன் வாதம் செய்ய ராசா என்ன பெரிய ஆளா என்று அதை ஏற்க மறுத்தார் முதல்வர் இந்த நிலையிலே வேளாண் சட்டங்களில் இருக்கின்ற சாதக பாதகங்கள் தொடர்பாக விவாதிப்பதற்கு தமிழக முதலமைச்சருக்கு விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்திருக்கின்றது.

3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இரண்டாவது வாரமாக டெல்லியை முற்றுகையிட்டு தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் அதுதொடர்பாக விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவதற்கு சம்மதம் தெரிவிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதனை நிராகரித்த விவசாய சங்கங்கள் வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

இதற்கிடையே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாய சட்டத்திற்கு தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்து வருகின்றார் நான் ஒரு விவசாயியாக இந்த சட்டத்தை ஆதரிக்கிறேன் எனவும், இந்த மூன்று சட்டங்களில் தமிழ்நாடு விவசாயிகள் எந்த வகையில் பாதிக்கிறார்கள் என்றும், கேள்வி எழுப்பியிருக்கிறார், அதோடு அரசியல் காரணங்களுக்காக வேண்டுமென்றே வேளாண்சட்டங்களை எதிர்க்கிறார்கள் என்று முதல்வர் குற்றம்சாட்டி இருக்கின்றார்.

இந்த நிலையில், நிவர் மற்றும் புரெவி புயல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பாதிப்புகளை பார்வையிட்ட தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி. ஆர் பாண்டியன், வேளாண்சட்டம் பற்றி பேசி இருக்கின்றார்.

இந்த 3 வேளாண் சட்டங்களையும் மறுபரிசீலனை செய்கின்றோம் என்று சம்மதம் தெரிவித்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது மத்திய அரசு ஆனாலும் மீண்டும் ,மீண்டும், வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார் என்று குற்றம் சாட்டி இருக்கிறார் பி.ஆர் பாண்டியன்.

இந்த சட்டத்தை கொண்டு வந்த மோடி அவர்களுக்கே இந்த சட்டங்கள் உடைய சாதக பாதகங்களைப் பற்றி சரிவர தெரியவில்லை ஆனால் சம்பந்தமே இல்லாமல் வேளாண்சட்டங்களை முதல்வர் ஆதரிப்பது தான் விவசாயிகளுக்கு வேதனை அளிக்கும் விஷயமாக இருக்கின்றது என்று தெரிவித்தார் பி.ஆர் பாண்டியன்.

ஒரு விவசாயி முதல்வராக இருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன் அவருடன் வேளாண்சட்டங்கள் தொடர்பாக எந்த மேடையிலும் விவாதம் செய்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன் சாதாரண விவசாயியான நான் தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகள் முன்னிலையில் அல்லது அவர் விரும்பும் எந்த ஒரு பொது மேடையிலோ விவாதிப்பதற்கு தயாராக இருக்கின்றேன் இது சம்பந்தமாக முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும் என்று பகிரங்கமாக முதல்வருக்கு சவால் விடுத்து இருக்கிறார் பி.ஆர் பாண்டியன்.

Exit mobile version