Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மன அமைதி கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்!

கீழே சொல்லப்பட்டிருக்கும் பரிகாரம் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள், அமைதியின்மை வீட்டிற்குள் நுழையவே பிடிக்காத தன்மை எதற்கெடுத்தாலும் எரிச்சல் உள்ளிட்டவற்றை நீக்குவதற்கான பரிகாரம் இதனை செய்து பலனடைந்து கொள்ளுங்கள் இதை செவ்வாய் மற்றும் சனி உள்ளிட்ட கிழமைகளை தவிர்த்து மற்ற நாட்களில் செய்யலாம். குறிப்பிட்ட நேரம் மற்றும் திசை என எதுவுமில்லை.

ஒரு வெள்ளை துணியில் கையளவு வெல்லம், கையளவு கோதுமை, கையளவு கல் உப்பு, இரண்டு செம்பு நாணயங்கள், உள்ளிட்டவற்றை சேர்த்து கட்டி வீட்டில் பூஜை அறை அல்லது வடகிழக்கு மூலையில் வைத்து விடவும். கட்டி தொங்கவிட அவசியமில்லை மாதம் ஒருமுறை மாற்றிவிடலாம்.

இது குடும்ப அமைதிக்கு சிறந்த முறையாகும் குறிப்பாக கணவன், மனைவி சண்டை ஏற்படுகிறது என்றால் மேற்கூறிய செம்பு நாணயத்திற்கு பதிலாக வெள்ளி நாணயம் வைத்துவிடலாம் பலன்கள் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.

ஒருவருக்கு தன்னுடைய சுய ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருந்தால் மன அமைதி குறைவு, தெளிவின்மை, எப்போதும் சிந்தனைகள், பணம் விவகாரத்தில் தடை உள்ளிட்டவற்றை சந்தித்துக் கொண்டே இருப்பார். அப்படிப்பட்ட அமைப்புகள் உடையோர் ஒரு ஞாயிறு அன்று இரவு படுக்கும் முன்னர் காய்ச்சாத பசும்பால் ஒரு ஸ்டீல் அல்லது வெள்ளி கப்பில் தன் தலைக்கு அருகில் வைத்து தூங்கி விடவும், பிறகு காலையில் அதனை அப்படியே கொண்டு சென்று கருவேல மரத்தின் வேருக்கு அடியில் விட்டு விட்டு திரும்பி பார்க்காமல் வீடு வந்து குளித்து விடவும்,

ஆனாலும் மூடாமல் கொண்டு செல்ல வேண்டும். மரம் அருகே இல்லாதவர்கள் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் பாலை ஊற்றிக் கொண்டு செல்லலாம். பாட்டிலை மூடக்கூடாது இதை வாரம் ஒரு முறை செய்து வரலாம் தொடர்ந்து 11 வாரங்கள் செய்ய பலன் அதிகரிக்கும் என்கிறார்கள்.

Exit mobile version