Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதை செய்தால் குடும்பத்தில் பிரச்சனையை இருக்காது!

வாழ்க்கையில் பிரச்சனை இல்லாத மனிதர்கள் யாருமே இருக்க முடியாது அதோடு பிரச்னையில்லாத வாழ்க்கை சுவாரசியமாகவுமிருக்காது என்பதற்கு பல உதாரணங்கள் அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டே செல்லலாம்.

உதாரணத்திற்கு குடும்பத்தில் அண்ணன், தம்பி, பிரச்சனை அக்கா, தங்கைகள் பிரச்சனை, சொத்து பிரச்சனை, பணப்பிரச்சனை இதை அனைத்தையும் தீர்த்து வைக்க இயலும்.

ஆனாலும்கூட எப்போதுமே இல்லத்தில் பிரச்சனை வந்து கொண்டே இருந்தால் என்ன செய்யலாம்? மன அமைதி இருக்காது, உடல் ஆரோக்கியம் சீராக இருக்காது, எந்த ஒரு வேலையிலும் நாட்டமிருக்காது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், குடும்பத்தில் அமைதி நிலவவும், சண்டை சச்சரவுகள் இல்லாத வாழ்க்கை வாழவும், எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை எண்ணங்கள் தோன்றவும், மிகச்சிறப்பான வழிமுறை ஒன்று இருக்கிறது.

நாள்தோறும் மாலை சமயத்தில் வேப்பிலை மீது 2 அகல் விளக்கு ஏற்றுவது மிகவும் சிறப்புடையது. அதாவது நாம் வீட்டு வாசலில் சதுரவடிவில் மஞ்சளால் கோலமிட்டு அதன்மீது வேப்பிலையை பரப்பி அதன்மீது 2 அகல் விளக்குகளில் மஞ்சள் திரியிட்டு விளக்கேற்றி வந்தால் திருஷ்டி படாது.

எதிரிகள் நம்மை விட்டு விலகிச் செல்வார்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். இவ்வாறு ஏற்றப்படும் விளக்கு குறிப்பாக கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version