Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தூங்கிய கணவனின் அந்தரங்க உறுப்பில் சூடான பாலை ஊற்றிய மனைவி! அதிர்ச்சி சம்பவம்!

புதுச்சேரியில் கருத்து வேறுபாடு காரணமாக கணவனிடம் பிரிந்திருந்த 34 வயது மனைவி, திடீரென தூங்கியிருந்த நேரத்தில் சூடான பாலை அவரது கணவனின் அந்தரங்க பகுதியில் ஊற்றியதால் அலறியுள்ளார். இதைத்தொடர்ந்து அப்பெண்ணின் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல் வெளியானது.

இந்த தம்பதிக்கு 15 மற்றும் 18 வயதுகளில் இரண்டு மகள்கள் உள்ளனர். ஒன்றாக வாழ்ந்த போது மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு இருந்த காரணத்தால் பிரச்சினையாகி கருத்து வேறுபாட்டுடன் தனித்தனியே வாழ்கின்றனர். இரண்டு குழந்தைகளுடன் முத்தியாள்பேட் பகுதியில் தாயுடன் பாதுகாப்பாக வாழ்ந்து வருகின்றனர். இவரது கணவர் கடந்த 1 ஆண்டுகாலமாக அயிரான்குப்பம் பகுதியில் தனியாக வாழ்கிறார்.

இந்நிலையில் கடந்த வியாழன் அன்று அப்பெண், தனது கணவருக்கு போன் செய்து வீட்டிற்கு வருமாறும், தன் அக்காவிடம் கடன் கேட்டுள்ளேன் அதைவைத்து படகு வாங்குங்கள் மீன்பிடி தொழிலை செய்து சம்பாதிக்கலாம் என்ற கணக்கில் பேசியுள்ளார். இதை நம்பி கணவரும் அவரது அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பெண்ணின் அக்கா, நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்தால்தான் கடன் தருவேன் என்று கூறினார். எனக்கு சம்மதம்தான் ஆனால் உங்கள் தங்கை வேறொருவருடன் தவறான தொடர்பில் இருக்கும் போது எப்படி குடும்பம் நடத்துவது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கணவனின் பேச்சால் கோபமடைந்த மனைவி அவரை பழிவாங்க நினைத்து, அவர் தூங்கிய நேரத்தில் கொதிக்க வைத்த பாலை எடுத்து ஆணுறுப்பில் ஊற்றியதும் உறக்கத்தில் இருந்த கணவன் வலியில் கதறி துடித்தார். இதையடுத்து இந்திரா காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Exit mobile version