பிரபல நடிகருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது!! உற்சாகத்தில் நடிகர் மற்றும் நடிகை!! வந்து குவியும் வாழ்த்துக்கள்!!
தமிழகத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மற்றும் தயாரிப்பாளராகிய ஆர்யா. இவர் 2005 ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு வேட்டை, சேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். மேலும் தமிழ் சினிமாவில் பரிச்சயமான நடிகரானார்.
இதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். மேலும் இவர் திருமணத்திற்காக தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அந்த நிகழ்ச்சியின் பெயர் எங்க வீட்டு மாப்பிள்ளை. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களுடன் பழகி அவருக்கு பிடித்தமான ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். ஆனால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எந்த ஒரு பெண்ணையும் நடிகர் ஆர்யாவுக்கு பிடிக்காததால் அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எந்த ஒரு பெண்ணையும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை.